மத்திய பட்ஜெட் 2026 இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்படுகிறது. காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள அதே வேளையில் நிர்மலா சீதாராமன் அணிந்து வரும் புடவைகளும் ஒவ்வொரு பட்ஜெட்டின் போதும் அதீத கவனம் பெறும்.

அந்த வகையில் இந்த பட்ஜெட் உரை தாக்கல் செய்யும்போது அவர் என்ன மாதிரியான சேலை அணிந்து வருவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த காலங்களில் இந்தியாவின் பாரம்பரியமான கைத்தறியை பசைசாற்றும் விதமாக அவர் ஆடை அணிந்து வருகிறார். அந்த வகையில் அவரின் முதல் பட்ஜெட் தாக்கல் தொடங்கி கடந்த ஆண்டு வரை என்னென்ன வகையிலான சேலை அணிந்து வந்திருக்கிறார் என்பதை காணலாம்.

2019-2020 நிதியாண்டில் முதல் முறையாக நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது தங்க நிற பார்டருடன் கூடிய இளஞ்சிவப்பு நிற மங்களகிரி பட்டுப்புடவையை அவர் அணிந்திருந்தார். அதேபோல் சூட்கேஸில் வைத்து எடுத்துச் செல்லப்பட்ட பட்ஜெட் உரையை பாஹி கட்டா எனப்படும் துணி உரையில் எடுத்து வந்தார்.

2020-2021ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டின் போது பச்சை நிற விளிம்புடன் கூடிய மஞ்சள் நிற பட்டுச் சேலையை அணிந்து வந்தார். பொருளாதார மீள்தன்மைக்கான நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் மஞ்சள் நம்பிக்கையையும், பச்சை நிலைத்தன்மையையும் குறிக்கும் என தெரிவிக்கப்பட்டது.

கொரோனா தொற்றுக்கிடையே 2021-2022ம் ஆண்டுக்கான பட்ஜெட் நிர்மலா சீதாராமன் தெலங்கனாவைச் சேர்ந்த போச்சம்பள்ளி இகாட் சேலையை தேர்வு செய்தார். சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் உள்ள அந்த சேலை சிக்கலான நெசவுக்கு பெயர் பெற்றது. உள்நாட்டு தொழில்களின்ம் மீட்சி மற்றும் வலிமைக்கான சான்றாக இந்த ஆடை பார்க்கப்பட்டது.

மத்திய பட்ஜெட் 2022-2023 ஆண்டு பட்ஜெட்டின்போது நிர்மலா சீதாராமன் ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த துருப்பிடித்த நிறமுடைய போம்காய் புடவையை அணிந்திருந்தார். அதில் வெள்ளி ஜரிகை வேலைப்பாடுகள் இடம் பெற்றது. போம்காய் பழங்குடியினரின் குறைவாக அறியப்பட்ட கைவினைத்திறனை வெளிக்காட்டும் வண்ணம் இந்த ஆடை இருந்தது.

2023-2024ம் ஆண்டு பட்ஜெட்டின்போது அவர் கர்நாடகாவின் இல்கல் பாரம்பரியத்துடன் தொடர்புடைய கருப்பு பார்டர் சிவப்பு நிறத்துடன் கூடிய தங்க ஜரிகை வேலைப்பாடுடன் அமைந்த இந்த ஆடை மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தது.

2024-2025ம் ஆண்டு நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது மேற்கு வங்காளத்தின் காந்தா எம்பிராய்டரியுடன் கூடிய நீல நிற டஸ்ஸர் பட்டுச் சேலையை அணிந்திருந்தார். 3வது முறையாக பாஜக ஆட்சி அமைந்தது அவர் அதே ஆண்டில் பட்ஜெட் தாக்கல் செய்தார். அந்த நேரம் மெஜந்தா மற்றும் தங்க நிற பார்டர்களுடன் கூடிய வெள்ளை நிற மங்களகிரி சேலை அணிந்து வந்தார்.

கடந்த 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய வந்தபோது பீகாரைச் சேர்ந்த மதுபானி மீன் உருவங்கள் இடம்பெற்ற வெள்ளை நிற புடவையை அணிந்திருந்தார். அதில் இடம்பெற்ற மீன் செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.