New Year Rain: புத்தாண்டில் மழை பெய்யுமா, பெய்யாதா? வானிலை மையம் சொல்வது என்ன?

11 months ago 7
ARTICLE AD

புத்தாண்டு தினத்தில் எங்கு எல்லாம் மழை பெய்யும் என்றும், தமிழ்நாட்டில் மழை நிலவரம் குறித்து தெரிந்து கொள்வோம்.

இன்று - நாளை

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

28-12-2024 மு6ல் 30-12-2024

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில இடங்களில் வசான பனிமூட்டம் காணப்படும்.

31-12-2024 மற்றும் 01-01-2025:

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் , தனியார் வானிலை வட்டாரங்கள் தெரிவிக்கையில் “ சுமத்ரா அருகே நிலவும் காற்றழுத்தத்தால் புத்தாண்டு தினத்தில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என்றும் மற்றும் வட கடலோர மற்றும் சென்னை பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தனியார் வானிலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Also Read: Thiruvalluvar Statue: மூன்று நாள் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா: கண்ணாடி பாலமும் திறப்பு: கூடுதல் விவரம்.!

சென்னை வானிலை முன்னறிவிப்பு:

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒருசில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்.

காற்றழுத்தம் :

நேற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர வட தமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (24-12-2024) காலை 05.10 மணி அளவில், அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்து, காலை 08.30 மணி அளவில் மேலும் வலுவிழந்ததுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Read Entire Article