தேர்தல் தோல்விக்கு பின்னர் இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில் பல முக்கிய விஷங்கள் குறித்து அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார். அதில் பல மாவட்ட செயலாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது என்ன ?

அந்த கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் “ என்ன ஆனாலும் சரி, சூரியன் ஒருபோதும் மறையாது. திரும்ப உதித்தே தீரும். சூரியன் இல்லாமல் எதுவும் நடக்காது. இது இயற்கை நியதி மட்டுமில்ல, தமிழ்நாட்டு அரசியல் நியதியும் இதுதான்.

நடந்து முடிந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இப்ப அமைதிருக்கும் அரசும், கூட்டணிக் கட்சிகளோட தயவாலதான் ஆட்சியை அமைச்சிருக்கு. அதுவும் நம்ம கூட சேர்ந்து வெற்றி பெற்றவர்களின் ஆதரவோடதான் ஆட்சி அமைஞ்சிருக்கு. நமக்கு பெரும்பான்மை கிடைக்கலயே தவிர, கணிசமான எண்ணிக்கையில வாக்குகள் கிடைச்சிருக்கு.

கொஞ்சம் வரலாற்றை திரும்பிப் பார்த்தால் 1989- நாம ஆட்சி அமைச்சோம். அடுத்து நடைபெற்ற 1991 தேர்தலில் வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே ஜெயிச்சோம்....96 ல மீண்டும் நம்ம ஆட்சி ஆனா அடுத்து வந்த 2001 தேர்தலில் நாம வென்ற இடங்கள் 37 தான்...அதே போல 2006 ல திமுக ஆட்சி அமைச்சு 2011 ல வெறும் 31 இடங்கள்...

இப்படி ஆட்சியில் இருந்து தோற்ற போதெல்லாம் நாம் மிகக் குறைந்த இடங்களிலேயே வென்றிருக்கிறோம்....இப்பொழுது 59 இடங்களில் வென்றிருக்கிறோம்......கூட்டணி எண்ணிக்கையை எல்லாம் சேர்த்துப் பார்த்தால் 73 இடங்கள். கடந்த முறைகளை ஒப்பிடும்போது இது கூடுதல் எண்ணிக்கை.... நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு .

அதுமட்டுமில்ல, இப்படி ஒரு கட்சிக்கு வோட்டு போட்டு - ஆட்சியில உட்கார வெச்சிட்டோமே- பலரும் வருந்தி பதிவு போடுறதையும் பார்க்குறேன். இதுதான் நம்ம ஐந்தாண்டு கால நல்லாட்சிக்கு கிடைச்ச அங்கீகாரம்.

உழைப்புக்கு கிடைத்த சான்று

இது உழைப்புக்கு கிடைத்த சான்று, ஆனா, அது வெற்றியா மாறாம போயிடுச்சு. பொதுவாழ்க்கைக்கு வந்தா வெற்றி தோல்வி சகஜம். ஏற்ற இறக்கங்கள் இருக்கும். மேடு பள்ளங்கள் இருக்கும். அதுதான் அரசியல். இந்தப் பக்குவம் வேற யாரையும் விட நமக்குத்தான் அதிகம்.இதுதான், பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களும் தலைவர் கலைஞர் அவர்களும் நமக்கு கத்து தந்திருக்க பக்குவம்.

அதனாலதான், மத்த கட்சிகள் மாதிரி நம்ம MLAகளை ரெசார்ட்ல, நட்சத்திர விடுதில ஒளிச்சு வைக்க வேண்டிய பயமில்லாம தோல்விலயும் நாம தைரியமாவே இருந்தோம்.

என்னைப் பொறுத்தவரையில, கடந்த ஐந்தாண்டு காலமும் கடுமையா உழைச்சேன். உங்களையும் உழைக்க வெச்சேன்.

என் சக்திக்கு மீறியும் உழைச்சேன். உங்களையும் ரெஸ்ட்டே இல்லாம உழைக்க வெச்சேன்.

இதுவரை எந்த அரசும் செஞ்சு தராத சாதனைகளை நாம செஞ்சு கொடுத்தோம்.

கோடிக்கணக்கான மக்களுக்கு நேரடிப் பயன் தரும் ஆட்சியா நம்ம ஆட்சி இருந்தது.

இது மக்களுக்குத் தெரியும்.

இருந்தாலும் நாம ஆட்சி அமைக்க முடியல.

இதுக்காக, நான் யாரையும் சுட்டிக்காட்டி குறை சொல்ல விரும்பல. தோல்விக்கான காரணங்களை கழக நிர்வாகிகள் தொடங்கி, பொதுமக்கள் வரை எல்லா விதமாவும் பேசுறாங்க.

ஒருத்தர் இன்னொருத்தரை குற்றம் சொல்லுறாங்க. அவர் இன்னொருத்தரை கை காட்டுறாரு. இப்படி மாத்தி மாத்தி, குற்றம் சொல்லிகிட்டே இருந்தா, இதுக்கு ஒரு முடிவே இருக்காது.

அப்ப, இதுக்கு யாருதான் பொறுப்பு? யாரும் யாரையும் குறை சொல்லாதீங்க.

கழகத்தின் தலைவர் என்ற முறையில, நானே இந்தத் தோல்விக்கு பொறுப்பேத்துக்குறேன். இதுதான் நிதர்சனம்.

இந்த தேர்தலில் நடந்திருப்பது புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி.

சுனாமினா சாகசமோ, சாதனையோ கிடையாது. பெரும் பாதிப்பு என்ற மீனிங்ல சொல்றேன். தமிழ்நாட்டின் நலன்களை பாதிச்சிருக்க சுனாமி பேரழிவு இது.தமிழ்நாட்டு மக்களை இதுல இருந்து, எப்படி மீட்டெடுக்க போறோம். அதை பத்தி யோசிங்க.எங்க கோளாறு நடந்துச்சு?எங்க மெத்தனம் ஏற்பட்டுச்சு? என்பதுதான் முக்கியம்.இதை ஆய்வு செஞ்சாகணும். ஒவ்வொரு தொகுதிக்கும் தனிப்பட்ட பல பிரச்சினைகள் இருக்கு. எல்லாரும் இதை பரிசீலிச்சு பார்க்கணும். ஆய்வு செய்யணும்.இது ஒரு தேர்தல் சுழல்தானே தவிர, நாமெல்லாம் எந்திரிக்கவே முடியாத தோல்வி இல்லை..இனி, கொஞ்சம் கூடுதல் கவனத்தோட, நம்ம செயல்பாடுகளை மாத்திகிட்டு வேலை செய்யணும்...முக்கியமா, ஒத்துமையா இருந்து வேலை செய்யணும்....அதுக்கு முன்னாடி நாம ஒவ்வொருத்தரும் நம்மை நாமே சுய பரிசோதனை செஞ்சிக்கணும்.முதல்ல, தோல்விக்கான காரணங்கள் குறித்து, தொகுதிவாரியா, நம்ம அனைத்து மட்ட நிர்வாகிகள் கிட்டயும் கருத்து கேக்கணும்.அவங்களோட குரலுக்கு முதல்ல நாம காது கொடுக்கணும்.அதுக்காக தலைமைக் கழகத்தின் சார்புல கள ஆய்வு நடத்தி அறிக்கை தர ஒரு குழுவை அமைக்கப் போறேன்.

விசாரணை நடத்தப்போறேன் – அதிரடி அறிவிப்பு வெளியிட்ட மு.க.ஸ்டாலின்

அவங்க தமிழ்நாடு முழுக்க, தொகுதி வாரியா, எல்லா தரப்பு நிர்வாகிகளையும் சந்திச்சு பேசி அடுத்த 20 நாட்களுக்குள்ள எனக்கு அறிக்கை கொடுப்பாங்க.தலைமைக் கழகத்தால அமைக்கப்படும் விசாரணைக் குழு,வெப்சைட் மூலமா கழகத்தின் உடன்பிறப்புகள் மற்றும் நம்ம மேல அக்கறை கொண்ட பொதுமக்கள் சொல்லுற ஆலோசனைகளை வெச்சு,திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு முறையில மிகப்பெரிய மாற்றத்த கொண்டு வரலாம்னு இருக்கேன்.அந்த மாற்றம்தான், நம்ம கழகத்தை இன்னும் ஒரு நூறாண்டுகளுக்கு உயிர்ப்போட வெச்சிருக்க போகுது.கழக அமைப்புல செய்யப்போற இந்த மாற்றங்களுக்கு முன்ன, நாம முதல்ல மாறியாகணும். நாம எல்லாருமே மாறியாகணும். யாரும் விதிவிலக்கு இல்ல.இந்த தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, மாநாடுகள் - பொதுக்கூட்டங்கள் - ஆர்ப்பாட்டங்கள் இதையெல்லாம் தாண்டுன களமா சமூக வலைத்தளங்கள் உருவெடுத்திருக்கு.

ஆன்லைன் என்பது நமக்கு புதுசு இல்ல. குறிப்பா சொல்லணும்னா, கொரோனா காலகட்டத்துல 3 ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட பொதுக்குழுவை காணொலியிலேயே நடத்திக் காட்டுன பெருமைக்குரிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். டெக்னாலஜிய பயன்படுத்துறதுல, இனி நாம கூடுதல் கவனம் செலுத்தணும். கழகத்தினர் ஒவ்வொருத்தரும் சமூக வலைத்தளங்கள்ல நேரடியா பங்கெடுத்து செயல்படணும்.தி.மு.க.வைப் போல, நம்ம தலைவர்களைப்போல காலத்திற்கேற்ப ஊடகங்களைப் பயன்படுத்துனவங்க வேற யாருமில்ல.

மாவட்ட செயலாளர் மட்டும் முக்கியமில்ல

மாவட்டச் செயலாளர்கள்தான் மாவட்டத்துக்கு முக்கியம். அதை நான் மறுக்கல.அதுக்காக, மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே முக்கியம்னு ஆகிட கூடாது.எல்லாருமே முக்கியம்தான். ஒரு கட்டடத்துக்கு எல்லாத் தூணும் முக்கியம்.ஒருவேளை யாராவது, “என் னால செயல்பட முடியாது”-னு நினைச்சா, மனப்பூர்வமாக முன் வந்து விலகிக்கலாம். நான் அதை தவறா சொல்ல மாட்டேன். உழைக்கத் தகுதியானவங்க எத்தனையோ பேர் இருக்காங்க. அடுத்து வர்ற தேர்தல்ல கழகம் கண்டிப்பா வெற்றி பெற்றாகணும். குறி வெச்சு களப்பணியாற்றுனா, நிச்சயம் வெற்றி பெறுவோம்.அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காம, நீங்க உழைச்ச உழைப்பாலதான்,இத்தனை தொகுதிகள்ல நாமும் நம்ம தோழமைக் கட்சிகளும் வெற்றி பெற முடிஞ்சுது.ஒரு தேர்தல்ல தோற்ற நாம் - மறு தேர்தல்ல வென்று காட்டி இருக்கோம். உங்க உழைப்பால வெற்றி பெற வெச்சிருக்கீங்க. அதுதான் தி.மு.க.! அந்த நம்பிக்கையோட பணியாற்றுங்க.இந்த தோல்வியை நினைச்சு யாரும் வருத்தப்பட வேணாம். நாம பல வெற்றிகளுக்குச் சொந்தக்காரங்க. நம்மோட இந்த தோல்வி தற்காலிகம்தான்” என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.