<p>''ஆண்ட பரம்பரை எனப் பேசியது குறித்த வீடியோவை எடிட் செய்துள்ளனர். அந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். 2 மாதங்களுக்கு முன்பு பேசியது எதற்காக தற்போது வெளியிடப்பட்டுள்ளது என தெரியவில்லை'' என்று அமைச்சர் மூர்த்தி விளக்கம் அளித்துள்ளார். </p>
<p>''ராஜராஜ சோழன் காலத்தில் இருந்து உள்ளதை கூறினேன். அமைச்சராகிய நான் அனைத்து சமூகத்தினருக்கும் ஆனவன். எல்லோருக்கும் நான் பொதுவானவர். அரசால் தேர்வில் செய்யப்பட்ட நீங்கள் எல்லோருக்கு பொதுவானவர்களாக இருக்க வேண்டும் என்றே அந்த நிகழ்ச்சியில் பேசி இருந்தேன்'' என்றும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். </p>