MDMK Vaiko Sathya: நன்றி கெட்ட வைகோ? ”அப்ப இனிச்சது, இப்ப கசக்குதோ” நம்பிக்கை இல்லாத போர் வாள்?

5 months ago 5
ARTICLE AD

MDMK Vaiko Sathya: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிற்கும், துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவிற்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.

வைகோ Vs மல்லை சத்யா:

மதிமுக பொதுச்செயலாலர் வைகோவின் மகன் துரை வைகோ மற்றும் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா இடையே நிலவி வந்த கருத்து மோதல் அண்மையில் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வைகோ மற்றும் மல்லை சத்யா இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்வதாக வைகோ குற்றம்சாட்டினார்.  இதுதொடர்பாக பேசிய மல்லை சத்யா, “குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, துரை வைகோவுக்காக எனக்கு துரோகி பட்டம் கொடுத்து வெளியேற்றப் பார்க்கிறார். வைகோவின் உயிரை 3 முறை காப்பாற்றிய என்னை வாரிசு அரசியலுக்காக துரோகி என சொல்லும் அளவுக்கு துணிந்துள்ளார்” என வேதனை தெரிவித்தார்.

மூன்று முறை உயிரை காப்பாற்றினாரா?

மல்லை சத்யாவின் பேச்சுக்கு நேற்று பூந்தமல்லியில் நடந்த நிகழ்ச்சியில் வைகோ பதிலளித்தார். அப்போது, “மூன்று முறை உயிரை காப்பாற்றியதாக மல்லை சத்யா கூறியுள்ளார். மாமல்லபுரம் கடலில் விழுந்தபோது காப்பாற்றினார். மற்ற 2 முறை எப்போது?” என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். பழைய நிகழ்வுகளை தேடியதில் கடலில் விழுந்தபோது வைகோவை காப்பாற்றியதை தவற, மற்றபடி எந்த சூழலிலும் அவரது உயிரை மல்லை சத்யா காப்பாற்றியதாக எந்த தரவுகளும் இல்லை. வைகோவின் கேள்விக்கு மல்லை சத்யாவும் தற்போது வரை எந்தவிதமான விளக்கமும் அளிக்கவில்லை. இதனால், அவர் வாய்க்கு வருவதை அடித்து விடுவதாக வைகோ ஆதரவாளர்கள் சாடி வருகின்றனர்.

நன்றி கெட்ட வைகோ?

இதுபோக நேற்றைய நிகழ்ச்சியிலேயே, “திருச்சி திமுக மாநாட்டிற்கு செல்லாமல் போயஸ்கார்டன் சென்று ஜெயலலிதாவை சந்தித்தது அரசியல் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு. திமுக கூட்டணியில்தான் நாங்கள் எந்த சூழ்நிலையிலும் நீடிப்போம்” எனவும் வைகோ பேசினார். இந்த பேச்சை தொடர்ந்து தான் அவருக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  பொடா சட்டத்தில் கைது செய்து 19 மாதங்கள் சிறையிலடைத்த ஜெயலலிதாவுடன் 2006ம் ஆண்டு கூட்டணி அமைத்து, 35 தொகுதிகளை வைகோ பெற்றார். அரசியல் லாபத்திற்காக அனைத்தையும் மறந்து கூட்டணி அமைத்து, அதிமுகவின் ஆதரவில் தனது கட்சிக்கு மாநில அங்கீகரத்தையும் பெற்றார். ஆனால், இன்று அதையே மறந்துவிட்டு, அதிமுக உடனான கூட்டணி மிகப்பெரிய தவறு என்கிறீர்களா? இப்படி அடிக்கடி நிலைப்பாட்டை மாற்றுவதால் தான் நீங்கள் மக்களின் நம்பிக்கையை பெற முடியாத தோல்வியுற்ற தலைவராக இருப்பதாகவும் சாடி வருகின்றனர்.

வார்த்தையை காப்பாற்றாத வைகோ:

கருணாநிதியின் வாரிசு அரசியலுக்கு குறிப்பாக ஸ்டாலினை எதிர்த்து திமுகவில் இருந்து விலகி சென்று தான், மதிமுக எனும் கட்சியையே வைகோ தொடங்கினார். ஈழப்போரின் போது கருணாநிதி தமிழன துரோகி என குற்றம்சாட்டினார். திமுகவை ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே இலக்கு என சூளுரைத்தார். ஆனால், இன்று அவரது நிலைப்பாட்டை மொத்தமாக மாற்றி, ஸ்டாலின் தான் மீண்டும் முதலமைச்சராக வேண்டும், அவரது தலைமையிலான திமுக கூட்டணியிலேயே மதிமுக தொடரும் என்றும் பேசி வருகிறார். இப்படி தனது அரசியல் பயணத்தில் சொன்ன பல முக்கிய அறிவிப்புகளையும், சற்றும் பின்பற்றாமல் நடந்து கொள்கிறார் என்பது வைகோ மீது பன்னெடுங்காலமாக உள்ள குற்றச்சாட்டாகும். இந்நிலையில் தான், மகன் துரை வைகோவிற்காக தன்னுடன் பல ஆண்டுகளாக பயணித்து வரும், மல்லை சத்யாவிற்கே துரோகி பட்டம் சுமத்துவதாகவும் வைகோ மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Read Entire Article