Maruti Victoris: மாருதியின் மாருதி விக்டோரிஸ் எஸ்யுவிக்கு போட்டியாக, ஹைப்ரிட் உள்ளிட்ட மூன்று கார்கள் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன.

மாருதி விக்டோரிஸ் எஸ்யுவி

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகமான எட்டே மாதங்களில் ஒரு லட்சம் யூனிட் விற்பனையை கடந்து, இந்த இலக்கை அதிவேகமாக எட்டிய மிட்-சைஸ் எஸ்யுவிக்களில் ஒன்றாக மாருதி விக்டோரிஸ் உருவெடுத்துள்ளது. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்களை விற்பனை செய்து, ப்ராண்டின் அதிகம் விற்பனையாகும் எஸ்யுவி ஆக உருவெடுத்துள்ளது. மிகவும் போட்டித்தன்மை மிக்க மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் விக்டோரிஸ் கார் மாடலானது ஹுண்டாய் க்ரேட்டா, கியா செல்டோஸ், டொயோட்டா ஹைரைடர், ஹோண்டா எலிவேட், டாடா சியாரா, ரெனால்ட் டஸ்டர் மற்றும் நிசான் டெக்டான் ஆகியவற்றிடமிருந்து போட்டியை எதிர்கொள்கிறது. பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங், சிஎன்ஜி எடிஷனில் அதிகபட்சமாக 27 கிலோ மீட்டர் தூரம் வரை மைலேஜ் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்டோரிஸிற்கு தயாராகும் போட்டியாளர்கள்

ரூ.10.50 லட்சத்தில் தொடங்கி ரூ.19.99 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) என்ற விலை வரம்பில் இந்த பிரிவில் அதிகரித்து வரும் விக்டோரிஸின் ஆதிக்கத்திற்கு சவால் விடுக்கும் வகையில், ஹுண்டாய் நிறுவனமானது வரும் தீபாவளி சீசனில் புதிய மிட்சைஸ் எஸ்யுவியை களமிறக்க திட்டமிட்டுள்ளது. இது சர்வதேச சந்தையில் ப்ராண்டின் பேயோன் காம்பேக்ட் க்ராஸ் ஓவர் கார் மாடலில் உருவாக்கப்படுகிறது. இதனிடையே ஹோண்டா நிறுவனமானது எலிவேட் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனையும், ரெனால்ட் நிறுவனம் டஸ்டரின் ஹைப்ரிட் எடிஷனையும் விழாக்காலத்தில் களமிறக்க இலக்கு நிர்ணயித்துள்ளன. இந்த மூன்று மாடல்கள் குறித்தும் இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

விக்டோரிஸ் - அடுத்தடுத்து வரும் 3 போட்டியாளகள்

1. ஹுண்டாய் பேயோன் எஸ்யுவி

Bc4i என்ற கோட்நேமை கொண்டுள்ள ஹுண்டாயின் புதிய மிட்-சைஸ் எஸ்யுவி ஆனது, சுமார் 4.18 மீட்டர் நீளம் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எரிபொருள் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது. பெட்ரோல் எடிஷனானது ப்ராண்ட் சார்பில் ஏற்கனவே வெற்றிகரமானதாக நிரூபிக்கப்பட்ட 1.5 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினானது மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் சந்தைப்படுத்தப்பட உள்ளது. இதே இன்ஜின் தான் தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட சிஎன்ஜி கிட்டுடன் பயன்படுத்தப்பட உள்ளதாம். ஐரோப்பா சந்தையில் பாதுகாப்பு பரிசோதனையில் பேயோன் 4 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. உள்ளூரில் இந்த காரின் விலை ரூ.8 லட்சத்தில் தொடங்கி ரூ.14 லட்சம் வரை (எக்ஸ் - ஷோரூம்) வரை நீளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்

2. ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்

ஹோண்டா எலிவேட்டின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனானது குறைந்த அளவிலான டிசைன் அப்க்ரேட்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அம்சங்கள் அடிப்படையில் ஏற்கனவே உள்ள 1.5 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜினை அப்படியே தொடர உள்ளதாம். இந்த எஸ்யுவி, புதிய லைட்டிங் சிக்னேச்சருடன் மறுவடிவமைக்கப்பட்ட எல்இடி முகப்பு விளக்குகள் மற்றும் திருத்தப்பட்ட பம்பர் ஆகியவற்றைக் கொண்ட மாற்றியமைக்கப்பட்ட முன்பக்கத்தை பெறலாம். கேபினுக்குள், புதிய அப்ஹோல்ஸ்டரி, மேம்படுத்தப்பட்ட கேபின் ட்ரிம்கள் மற்றும் ஒரு புதிய டச்ஸ்கிரீன் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூரில் இந்த காரின் விலை ரூ.15.30 லட்சத்தில் தொடங்கி ரூ.20.50 லட்சம் வரை (எக்ஸ் - ஷோரூம்) வரை நீளும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு பரிசோதனையில் ஏற்கனவே கொண்டுள்ள 5 ஸ்டார் ரேட்டிங் அப்படியே தொடரக்கூடும்.

3. ரெனால்ட் டஸ்டர் ஹைப்ரிட்

ரெனால்ட் டஸ்டர் ஹைப்ரிட் எடிஷனானது, 1.8 லிட்டர் நான்கு சிலிண்டர் நேட்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் உடன் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் 1.4kWh லித்தியம்-அயன் பேட்டரி பேக்கை கொண்டிருக்கும். இது ஒருங்கிணைந்து 160bhp ஆற்றலை வழங்குகிறது. நகர்ப்புற ஓட்டத்தில் 80% வரை டஸ்டர் ஹைப்ரிட் EV பயன்முறையில் இயங்கும் என்று கார் ரெனால்ட் தரப்பு தெரிவித்துள்ளது. டிரான்ஸ்மிஷன் பணிகளை 8-ஸ்பீட் மல்டி-மோட் DHT (டெடிகேட்டட் ஹைப்ரிட் டிரான்ஸ்மிஷன்) யூனிட் கையாளுகிறது. உள்ளூரில் இந்த காரின் விலை ரூ.20 லட்சத்தில் தொடங்கி ரூ.20.09 லட்சம் வரை (எக்ஸ் - ஷோரூம்) வரை நீளும் என எதிர்பார்க்கப்படுகிறது.