வரப்போகும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக செய்த ஊழல் பட்டியல் பற்றிய அறிக்கை வெளியிடப்படும் என தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை வடக்கு (கி) மாவட்டம் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி பயிற்சி பாசறை அணி தலைமை சார்பில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் 452 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் மரிய வில்சன் கலந்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மரிய வில்சன், வட சென்னை பகுதியில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, துறைமுகம் ஆகிய இரு தொகுதிகளை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் வென்றது. இந்த இரண்டு தொகுதிகள் மட்டும் மிஸ்ஸாகி விட்டது. அந்த உறுத்தல் என் மனதில் இருக்கிறது. அதனை வரப்போகும் நாட்களில் சரி செய்ய வேண்டும். ஏனென்றால் நடந்த சம்பவங்களைப் பார்த்து நான் வருத்தப்பட்டது உண்டு. அதாவது, கடந்த ஜூன் மாதம் சட்டமன்றம் 3 நாட்கள் நடைபெற்றது. அப்போது ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கினார்.

அவர் தனது உரையில் “கட்சி நிதி” என சொன்னதும் எதிர்க்கட்சியான திமுக வெளிநடப்பு செய்தது. அதிலும் ஒருவர் மனசாட்சியே இல்லாமல், எதுவுமே தெரியாதது போல கட்சி நிதி என்றால் என்ன என கேட்டு விட்டு சென்றார். அவர் தான் துறைமுகம் தொகுதியில் ஜெயித்த சேகர்பாபு. அவருக்கு இந்த மேடை வாயிலாக நான் பதிலளிக்கிறேன். வரப்போகும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நீங்கள் அனைவரும் கண்டிப்பாக பார்ப்பீர்கள்.

தனியாக ஒரு அறிக்கை திமுக செய்த ஊழல் பட்டியலாக தயாராகி கொண்டிருக்கிறது. அதனை தாக்கல் செய்யும் அன்று உங்களுக்கு இருக்கிறது. என்ன நடக்கப்போகிறது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். என்னா நடிப்பு, எங்க தலைவர் விஜயே நடிப்பை விட்டு விட்டு வந்து விட்டார். மரியாதை இல்லாமல் பேசாதீர்கள். ஒருமையில் பேசுகிறீர்கள், உங்கள் வளர்ப்பு அப்படியிருக்கிறது.

Also Read: EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்

தவெக தலைவர் விஜய், அமைதியாக, அழகாக, மரியாதையாக பேசக்கூடியவர். எங்களுக்கும் அதனைப் பழக்கப்படுத்தியுள்ளார். நீங்கள் எங்களை உசுப்பேற்றிப் பார்த்தாலும் நாங்கள் அப்படி பேச மாட்டோம். உங்களையும் நாங்கள் மனிதர்களாகவே பார்க்கிறோம். ஆனால் ஒரு அளவுகோல் என்பது உள்ளது. அதற்கு மேல் பேசினால் நாங்கள் வேறு மாதிரி பேசுவோம். வரப்போகும் நாட்கள் தமிழ்நாடு வளர்ச்சியை நோக்கி மட்டுமே இருக்கும். ஊழல் இல்லாத தமிழ்நாட்டில் நீங்கள் வாழப் போகிறீர்கள். 100 சதவிகிதம் நம்பிக்கையுடன் இருங்கள். இதனை கெடுக்க 3 மாதம், 6 மாதம் கெடு என பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தான் அட்ரஸ் இல்லாமல் போகப்போகிறார்கள் என தெரிவித்தார்.