Mahindra XUV700: அடிதூள்..! மஹிந்திரா XUV700 விலை அதிரடியாக குறைப்பு, டாடா சஃபாரிக்கு செம்ம டஃப்

9 months ago 5
ARTICLE AD

Mahindra XUV700: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடா சஃபாரியின் போட்டியாளரான மஹிந்திரா XUV700 மேலும் எளிதில் வாங்கக் கூடியதாக குறைந்துள்ளது.

மஹிந்திரா XUV700 விலை குறைப்பு:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பல்வேறு முக்கிய உற்பத்தி நிறுவனங்களும்,  தங்கள் கார் மாடல்களின் விலையை உயர்த்தி வருகின்றன. விநியோக சங்கிலி, உதிரி பாகங்களின் விலை உயர்வு ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் யாரும் எதிர்பாராத விதமாக, உள்நாட்டின் முன்னணி எஸ்யுவி கார் உற்பத்தி நிறுவனமான  மஹிந்திரா விலை குறைப்பை அறிவித்துள்ளது. அதன்படி,  XUV700 ஐ மிகவும் மலிவு விலையில் வழங்க முடிவு செய்து அதன் விலையை ரூ.75,000 குறைத்துள்ளது.

எந்த வேரியண்டிற்கு எவ்வளவு விலை குறைப்பு?

XUV700 காரின் முதன்மை மாடலில் தற்போது MX, AX3, AX5, AX5S, AX7, மற்றும் AX7 L என ஆறு வேரியண்ட்கள் உள்ளன. அதில் AX7 மற்றும் AX7 L வேரியண்ட்களுக்கு விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் AX7 பெட்ரோல் ஆட்டோமேடிக் ஏழு இருக்கைகள் மற்றும் டீசல் தானியங்கி ட்ரிம்கள் ரூ.45,000 விலைக் குறைப்பும், AX7 L ரூ.75,000 விலைக் குறைப்பும் பெறுகின்றன.

இன்ஜின் விவரங்கள்:

மஹிந்திரா XUV700 இரண்டு வகைகயான இன்ஜின்களை கொண்டுள்ளது. அதன்படி 2.0 L mStallion Turbo Petrol With Direct Injection (TGDi) மற்றும் 2.2 L mHawk Turbo Diesel with CRDe இன்ஜின் வகைகள் இடம்பெற்றுள்ளன. டர்போ பெட்ரோல் இன்ஜின் முறையே 197 HP மற்றும் 380 Nm உச்ச சக்தி மற்றும் முறுக்குவிசை வெளியீட்டை வழங்குகிறது. அதேசமயம், டர்போ டீசல் இன்ஜின் MX வகைகளுக்கு 152 HP மற்றும் 360 Nm இன் உச்ச சக்தியையும், AX வகைகளுக்கு 182 HP மற்றும் 420 Nm இன் உச்ச சக்தியையும் வெளியிடுகிறது.

மஹிந்திரா XUV700: அம்சங்கள்:

மஹிந்திரா XUV700 காரில் 26.03 செ.மீ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் கார்ப்ளே, இன்ஃபோடெயின்மென்ட் செயல்பாடுகளை அணுக ரோட்டரி நாப், சோனியின் 12-ஸ்பீக்கர் சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா மற்றும் பார்க்கிங் அசிஸ்ட், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 360-டிகிரி கேமரா சிஸ்டம், டிரைவர் தூக்கக் கலக்க எச்சரிக்கை போன்ற அம்சங்கள் நிறைந்துள்ளன.

மஹிந்திரா XUV700: விலைகள்:

மஹிந்திரா வலைத்தளத்தின்படி, XUV700 தற்போது AX7 இன் ஆரம்ப விலை ரூ.19.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் AX7 L டீசல் AT இன் விலை ரூ.24.99 லட்சம் வரை உள்ளது. மஹிந்திரா XUV700 எபோனி எடிஷனையும் அறிமுகப்படுத்தியது, இது 18-இன்ச் கருப்பு அலாய் வீல்கள், கருப்பு நிற ORVMகள், கருப்பு தோல் அப்ஹோல்ஸ்டர், கருப்பு நிற கிரில் மற்றும் பலவற்றைக் கொண்ட முழு பிளாக் தீமை கொண்டுள்ளது. XUV700 எபோனி எடிஷனின் விலை ரூ.19.64 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. இதனிடையே, இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மஹிந்திரா XUV700 கார் மாடலின் போட்டியாளரான, டாடா சஃபாரியின் விலை ரூ.15.5 லட்சத்தில் இருந்து தொடங்கி ரூ.27.25 லட்சம் வரை நீள்கிறது.

Read Entire Article