வரலட்சுமி விரதம் மற்றும் முகூர்த்த நாட்கள் தொடங்குகின்றன என்பதால் இந்த விலையேற்றம் மாறியுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

மதுரை மல்லிகைப் பூ சிறப்பு

மதுரை மல்லி என்பது மதுரை, விருதுநகர், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்படும் சிறப்பு வாய்ந்த பூவாகும். மீனாட்சி தாயை மையமாக வைத்து இயங்கும் மதுரை மாநகர், மல்லிகைப் பூ மற்றும் பிற பூக்களுக்கு வணிகம் செய்ய ஏதுவாக உள்ளது. குறிப்பாக மல்லிகைப் பூ கி.மு 300-ஆம் ஆண்டிலிருந்து பயிரிடப்பட்டு வருகின்றன. இதற்கான குறிப்புகள் சங்க இலக்கியங்களில் மற்றும் கோயில் சிற்பங்களில் காணப்படுகின்றன. இப்பூக்கள் தங்களது தனித்துவமான மணம் மற்றும் நறுமணத்திற்காக பிரசித்தி பெற்றவை. இதனால் வெளியூர் பயணிகள் மதுரை வரும் போது மல்லிகைப் பூவை விரும்பி வாங்குகின்றனர். இதே போல் கோயில் நகரமான மதுரையில் பிற பூக்களின் விற்பனையும் எப்போது சூடுபறக்கும். இந்நிலையில் வரலட்சுமி விரதம் மற்றும் முகூர்த்த நாட்கள் தொடங்குகின்றன இதன் காரணமாக மதுரையில் பூக்களின் விலை எப்படி உள்ளது என்பதை காணலாம்.

மதுரை மலர் சந்தையில் பூக்களின் (22.08.2026) இன்றைய விலை நிலவரம்

* மதுரை மல்லிப் பூ கிலோ ரூ.1200,

* முல்லைப் பூ கிலோ ரூ.800,

* செவ்வந்திப் பூ கிலோ ரூ.300,

* சம்பங்கிப் பூ கிலோ ரூ.500,

* நாட்டு சம்பங்கிப் பூ கிலோ ரூ.800,

* கனகாம்பரம் பூ கிலோ ரூ.1000 ,

* பட்டன் ரோஸ் ரூ.300,

* பன்னீர் ரோஸ் ரூ.300, தாமரை (ஒன்றுக்கு) ரூ.100 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து மாட்டுத்தாவணி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில்...," ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்தம் நாளை தொடங்குவதால் மல்லிகை பூ விலை அதிகரித்து காணப்படுகிறது. இன்று அதிகாலை மல்லிகைப்பூ ரூ.2,000லிருந்து ரூ.2,500 வரை விற்பனையானது. உசிலம்பட்டி நிலக்கோட்டை மலர் சந்தைகளில் தற்போது வரை ரூபாய் 2500 வரை விற்பனை ஆகிறது. இன்று காலை ரூபாய் 60 க்கு விற்ற தாமரை பூ (ஒன்றுக்கு) நேரம் செல்ல ரூபாய் 100 வரை விற்பனை ஆகிறது. காரணம் வரலட்சுமி விரதம் மற்றும் முகூர்த்த நாட்கள் தொடங்குகின்றன என்பதால் இந்த விலையேற்றம் என்றார்.