Lovers Day: ரோஜா கடலே.. லவ்வர்ஸ் டே-க்காக பூக்கள் விற்பனை படுஜோர்! டாப் கியரில் விலை!

2 months ago 8
ARTICLE AD

உலகம் முழுவதும் சில பண்டிகைகளும், நிகழ்வுகளும் மட்டும் மக்களால் பொதுவாக கொண்டாடப்படும். அந்த வகையில், எந்தவொரு மதத்திற்கும் உட்படாமல் உலகெங்கும் வாழும் மக்களால் கொண்டாடப்படும் பண்டிகை காதலர் தினம்.

காதலர் தினம்:

ரோமானிய மன்னன் கிளாடியஸ் 3 ஆண்கள் திருமணம் செய்யத் தடை விதித்தார். அது அப்போது நாட்டு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது. மன்னனின் உத்தரவை எதிர்த்து பாதிரியார் வாலண்டைன் என்பவர் பல காதலர்களுக்கு திருமணம் செய்து வைத்தார். இதற்காக அவரை கிளாடியஸ் மன்னன் பிப்ரவரி 14ம் தேதி தூக்கிலிட்டான். அவரது நினைவு நாளே ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது.

காதலர் தினம் என்பது காதலர்கள் மட்டுமின்றி திருமணமானவர்களும் கொண்டாடும் ஒரு பண்டிகையாக இன்று கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்தில் தங்களது அன்பை வெளிப்படுத்தும் விதமாக பலரும் தங்களது காதலர்களுக்கு பரிசுகளை வழங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

பூக்கள் விற்பனை மும்முரம்:

காதலர் தினம் என்றாலே அனைவரது நினைவுக்கும் முதலில் வருவது ரோஜா. காதலின் அடையாளமாக கொண்டாடப்படும் ரோஜாப் பூ விற்பனை, நாளை காதலர் தினத்தை முன்னிட்டு வழக்கத்தை விட பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இந்தியா முழுவதும் ரோஜா விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் மதுரை பூ மார்க்கெட், கன்னியாகுமரி தோவாளை பூ மார்க்கெட் உள்பட தமிழ்நாட்டின் முக்கியமான பூ சந்தைகளில் பூக்கள் வரத்து பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இனிப்புகள், பூங்கொத்துகள் விற்பனையும் படுஜோர்:

கிருஷ்ணகிரியில் இருந்தும், ஊட்டியில் இருந்தும் தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய பகுதிகளுக்கும் ரோஜா ஏற்றுமதி அதிகளவில் செய்யப்பட்டு வருகிறது. ரோஜா மலர்கள் மட்டுமின்றி மற்ற பூக்களின் வரத்தும் அதிகரித்துள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு பூக்களுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளதால் விலையும் அதிகரித்துள்ளது.

ரோஜா பூக்கள் மட்டுமின்றி கடைகளில் பூங்கொத்து விற்பனையும் அதிகரித்துள்ளது. ஃப்ளிப்கார்ட், அமேசான் போன்ற இணையதளத்தில் பூக்கள், பூங்கொத்துக்கள், சாகலேட் விற்பனையும் அதிகரித்துள்ளது.

இனிப்புகள், பூக்கள், பூங்கொத்துகள் மட்டுமின்றி ஏராளமான பரிசுப்பொருட்களும் இணையத்தில் படுஜோராக விற்பனையாகி வருகிறது. ஆன்லைன் வர்த்தக தளங்கள் மட்டுமின்றி நேரடியாகவும் கடைகளில் காதலர்கள் பரிசுப்பொருட்களை வாங்க குவிந்து வருகின்றனர். காதலர் தினத்தை முன்னிட்டு பூங்காக்கள், கடற்கரை போன்ற இடங்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகளவில் இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

Read Entire Article