சபாநாயகராக ஜேசிடி பிரபாகர்

தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். இதனையடுத்து தமிழக சட்டசபை சபாநாயகர் தேர்தலில் தவெக சார்பில் ஜேசிடி பிரபாகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் இவரை எதிர்த்து யாரும் போட்டியிடாத காரணத்தால் போட்டியின்றி ஜேசிடி பிரபாகர் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து இன்று காலை சட்டசபை முன்னவர் செங்கோட்டையனும், எதிர்கட்சி தலைவர் உதயநிதியும் சபாநாயகர் இருக்கையில் ஜேசிடி பிரபாகரை அமரவைத்தனர். இதனையடுத்து சபாநாயகரின் செயல்பாடுகள் தொடர்பாக சட்டமன்ற கட்சி தலைவர்கள் வாழ்த்தி பேசினார்கள்.

சட்டமன்றத்தில் உதயநிதி பேச்சு

இதனையடுத்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை வாழ்த்தி பேசிய உதயநிதி ஸ்டாலின், 17வது எதிர்கட்சி தலைவராக முதல் உரை இது. அண்ணா, பெரியார், கலைஞர், இந்தியாவிற்கே வழிகாட்டிய திராவின மாடல் ஆட்சி தந்த ஸ்டாலின், இரண்டாவது முறையாக தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். திமுக கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டார். இதனையடுத்து பேசிய அவர், சபாநாயகருக்கும், துணை சபாநாயகருக்கும் வாழ்த்துக்கள். சபாநாயகர் எப்போதும் சிரித்த முகத்திற்கு சொந்தக்காரர். அனைவரிடமும் அன்போடு பழக கூடியவர், இதற்கு முன்பாக 2 முறை வெற்றி பெற்று எம்எல்ஏவாக பணியாற்றி இருக்கிறீர்கள்

எதிரிகட்சியாக இல்லாமல் எதிர்கட்சியாக செயல்படும்

பொறுப்புகளை சிறப்பாக வழிநடத்தி நடுநிலையாக செயல்படு வேண்டும். முதலமைச்சர் அரசியல் கட்சி தலைவர் வீட்டிற்கு சென்றது அரசியல் நாகரீகமாக பார்க்கப்படுகிறது. எனவே அரசியல் நாகரீகம் இந்த பேரவையிலும் தொடர வேண்டும். திமுக எதிரிகட்சியாக இல்லாமல், எதிர்கட்சியாக செயல்படும், பிற மாநிலங்களுக்காக எடுத்துக்காட்டாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்க கூடிய வகையில் இந்த சட்டப்பேரவை திகழ்ந்து வருகிறது. எனவே ஜனநாயக மாண்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடுநிலையோடு செயல்படவேண்டும்

சனாதனம் ஒழிக்கப்படும்

ஆளுங்கடுசி எதிர்கட்சி எதிர்கட்சியாக இருந்தாலும் ஒரே வரிசையில் தமிழக மக்களுக்கு உழைக்க வேண்டும்.இதைத்தான தமிழக மக்களும், திமுகவும் விரும்புகிறார்கள். திமுக அரசு வாக்களித்த மக்களுக்கு மட்டுமில்ல வாக்களிக்காத மக்களுக்கும் அரசாக செயல்பட்டுள்ளது. எனவே அதே போல வாக்களிக்காத மக்களுக்கும் இந்த அரசு அரசாக செயல்படவேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆளுநர் பங்கேற்ற விழாவில் வந்தே மாதரம் பாடப்பட்டது. தமிழ்தாய் வாழ்த்து 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவம். எனவே வரும் நாட்களில் ஆளுநர் நிகழ்வில் தமிழ்தாய் வாழ்த்து 3வது இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டால் திமுக பொறுத்துக்கொள்ளாது என குறிப்பிட்டவர், வெல்க தமிழ், வாழ்க தமிழ்நாடு, மக்களை பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்படும் என உதயநிதி பேசினார்.