Jasprit Bumrah: அந்த மாற்றத்திற்கு காரணம் விராட் கோலிதான்..பும்ரா ஓபன் டாக்

1 year ago 7
ARTICLE AD

நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளர்:

உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா. இந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் மட்டும் 14 விக்கெட்டுகளை 4.17 என்ற எக்கனாமியில் எடுத்து அசத்தியவர். அதேபோல் டி20 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருதையும் வென்றவார்.

இந்நிலையில் தான் விராட் கோலி ஃபிட்னஸ் விசயத்தில் தன்னை மாற்றியதாக ஜஸ்ப்ரித் பும்ரா கூறியுள்ளார். இது  தொடர்பாக அவர் பேசுகையில், "இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மிகச்சிறந்த பேட்ஸ்மேன். ஆனால் பந்து வீச்சளர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற முறையில் சிறப்பாக நடந்து கொள்ளும் கேப்டன்களில் அவரும் ஒருவர்.

அதாவது அவர் வீரர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஒரு வீரர் என்ன செய்கிறார் என்பதற்கு ஏற்ப செயல்படுவார். ரோஹித் ஷர்மாவை சிலர் கடுமையானவர் என்று நினைத்து கொள்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.

ஃபிட்னஸ் விஷயத்தில் மாற்றிய கோலி:

அவர் பந்து வீச்சாளர்களின் கருத்துகளை திறந்த மனதுடன் கேட்பார். எம்.எஸ்.தோனி எனக்கு எல்லா நேரங்களிலும் ஆதரவாக இருந்தார். தோனி உள்ளுணர்வு மீது நம்பிக்கை வைக்கும் வீரர். பெரும்பாலும் திட்டமிட்டு செயல்படுவதன் மீது அவருக்கு நம்பிக்கை இல்லை. விராட் கோலி எனர்ஜியால் வழி நடத்தப்படக்கூடிய ஆர்வம் மிகுந்தவர்.

அவர் எப்போதும் தனது இதயத்தை ஜெர்ஸியில் வைத்து விளையாடுவார். அவர் எங்களை ஃபிட்னஸ் விஷயத்தில் மாற்றினார். கேப்டனாக இல்லையென்றாலும் விராட் கோலி இப்போதும் தலைவராக இருக்கிறார்" என்று ஜஸ்ப்ரித் பும்ரா கூறியுள்ளார்.

மேலும் படிக்க: Jay Shah:"நான் தான் காரணம்" ஆனாலும் ஜெய்ஷா ரொம்ப ஸ்டிரிக்ட்!

மேலும் படிக்க: Punjab Kings: பஞ்சாப் கிங்ஸின் பங்கு யாருக்கு? ப்ரீத்திக்கு குட் நியூஸ் வருமா?

Read Entire Article