தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வந்தவர் விஜய். தவெக-வை கட்சியைத் தொடங்கியபோதே தான் இனி திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என்று விஜய் திட்டவட்டமாக அறிவித்தார். அவர் கட்சி தொடங்கி கோட் படம் நடித்த பிறகு, அவரது நடிப்பில் கடைசியாக உருவாகிய படம் ஜனநாயகன்.

விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன்:

எச்.வினோத் இயக்கத்தில் உருவாகிய இந்த படம் கடந்த பொங்கலுக்கு வெளியாகிய வேண்டிய திரைப்படம். ஆனால், தணிக்கைச் சான்று பிரச்சினை காரணமாக இந்த படம் வெளியாகாமல் இழுத்தடிக்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் வெளியாகிய பிறகு விஜய் ஆட்சியைக் கைப்பற்றினார்.

இவரு அழுறத பார்க்கும்போது நமக்கும் அழுகை வருது 🥹😭#JanaNayagan pic.twitter.com/jSNRk9X2Nq

— Pokkiri_Victor (@Pokkiri_Victor) July 23, 2026

இந்த சூழலில், விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் பல்வேறு நெருக்கடிகளுக்கு பிறகு இன்று வெளியானது. திரைப்படங்களில் நேற்று இரவு முதலே கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கிய நிலையில், இன்று காலை முதலே விஜய் ரசிகர்கள், தவெக-வினர் திரையரங்கில் ஆர்ப்பரித்து படத்தைப் பார்த்து ரசித்து வருகின்றனர்.

தளபதி @actorvijay சம்பாரிச்ச சொத்து மக்களின் இந்த அன்பு தான் 😭😭#OneLastDance #JanaNayagan #JananayaganFDFS pic.twitter.com/USxHBZ2Lna

— கோடீஸ்வரன் (@KodeeswaRaja_) July 23, 2026

கண்ணீருடன் வெளியே வந்த ரசிகர்கள்:

விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றாலும், அவர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தியது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வேதனையை உண்டாக்கியுள்ளது. ஜனநாயகன் படம் முடிந்த பிறகு படத்தைப் பார்த்து வெளியே வரும் விஜய் ரசிகர்கள் பலரும் இதன்பின்பு விஜய்யை திரையில் காணப்போவதில்லை என்ற வேதனையுடன் கண்ணீர்மல்க வெளியேறினர்.

52 வயதான விஜய் 1984ம் ஆண்டு வெற்றி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். குழந்தை நட்சத்திரமாகவே 6 படங்களில் நடித்த விஜய் 1992ம் ஆண்டு நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார்.

கேரளா ரசிகர்களின் கண்ணீர் 🥹#jananayagan pic.twitter.com/NjC9Hy9EWU

— 𝚃𝚊𝚖𝚒𝚕 𝚜𝚎𝚕𝚟𝚊𝚗 𝚃𝚅𝙺 (@Selvatvk6kb) July 23, 2026

காதல் ஹீரோ டூ மாஸ் ஹீரோ:

அதன்பின்பு பல படங்களில் நடித்து வந்த விஜய்க்கு பூவே உனக்காக பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தின் மூலமாக ஒரு தவிர்க்க முடியாத கதாநாயகனாக தன்னை மாற்றிக் கொண்ட விஜய்க்கு லவ் டுடே, காதலுக்கு மரியாதை, பிரியமுடன், துள்ளாத மனமும் துள்ளும், கண்ணுக்குள் நிலவு, குஷி, பிரியமானவளே படங்கள் குடும்பங்கள் கொண்டாடும் படங்களாக அவரை மாற்றியது.

கில்லி படம் மூலமாக ஆக்ஷன் ஹீரோவாக மாபெரும் வெற்றி பெற்ற விஜய்க்கு திருப்பாச்சி, சிவகாசி, போக்கிரி அவரை மாஸ் ஹீரோவாக மாற்றியது. பின்னர், துப்பாக்கி, கத்தி, மெர்சல் போன்ற படங்கள் மூலமாக ரஜினிகாந்திற்கு நிகரான செல்வாக்கையும், வியாபாரத்தையும் பெற்றார். இந்த சூழலில், தன்னுடைய 69வது படத்துடன் விஜய் 1984ம் ஆண்டு தொடங்கிய திரை வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வேதனையை உண்டாக்கியுள்ளது. திரையரங்கில் இருந்து கண்ணீருடன் ரசிகர்கள் வெளியேறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய்யின் கடைசி படம் என்பதாலே இந்த படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களும் திரையரங்கிற்கு சென்று பார்த்து வருகின்றனர்.