Jamie Smith: தலைதூக்கும் இங்கிலாந்து.. ஜேமி ஸ்மித் அபார சதம்.. திணறும் இந்திய பவுலிங்!

5 months ago 4
ARTICLE AD

India vs England 2nd Test: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்து வடருகிறது. சுப்மன்கில்லின் அபார இரட்டை சதத்தின் உதவியால் இந்தியா 587 ரன்களை விளாசிய நிலையில், 2வது நாளான நேற்றே டக்கெட், ஒல்லி போப், கிராவ்லி விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து.

5 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து:

இந்தி நிலையில், 3வது நாளான இன்று ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலே முகமது சிராஜின் ஒரே ஓவரில் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் அடுத்தடுத்து அவுட்டானார்கள். 84 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்த நிலையில், ஹாரி ப்ரூக் - ஜேமி ஸ்மித் ஜோடி சேர்ந்தனர்.

நங்கூரமிட்ட ப்ரூக் - ஸ்மித்:

5 விக்கெட்டுகளை இழந்த நிலையில், எஞ்சிய விக்கெட்டுகளை இந்திய அணி விரைவில் கைப்பற்றலாம் என்று கருதினர். ஜேமி ஸ்மித் முதல் பந்திலே பவுண்டரியுடன் ஆட்டத்தை தொடங்கினார். இந்த ஜோடி ஒருநாள் போட்டி போல ஆடினார்கள். குறிப்பாக, ஜேமி ஸ்மித் அதிரடியாகவே ஆடினார்.

ஆகாஷ் தீப், முகமது சிராஜ் ஓவரில் அவர் நிதானம் காட்டினாலும் பிரசித் கிருஷ்ணா ஓவரில் அவர் வெளுத்து வாங்கினார். அவரை குறிவைத்து பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். அவருக்கு மறுமுனையில் ஹாரி ப்ரூக் ஒத்துழைப்பு அளித்தார். இதனால், ஜேமி ஸ்மித் அதிரடியாக ஆடினார். இந்த ஜோடி இங்கிலாந்து அணிக்காக நங்கூரமாக ஆடி வருகின்றனர்.

ஜேமி ஸ்மித் சதம்:

இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ள ஜேமி ஸ்மித் 80 பந்துகளில் 14 பவுண்டரி 3 சிக்ஸருடன் சதம் விளாசி அசத்தினார். முதல் இன்னிங்சில் இந்திய அணி எந்தளவு முன்னிலை பெறுகிறார்களோ, அந்தளவு இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக மாறும். மைதானம் பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமாக இருப்பதால் ஆகாஷ் தீப், முகமது சிராஜ், ஜடேஜா தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் பந்துவீச தடுமாறி வருகின்றனர்.

இந்த ஜோடியைப் பிரிக்க கேப்டன் சுப்மன்கில் ஆகாஷ் தீப், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, நிதிஷ் ரெட்டி, ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரைப் பயன்படுத்தி வருகிறார். ஹாரி ப்ரூக் அளித்த கேட்ச் வாய்ப்பு ஒன்றை கேப்டன் சுப்மன்கில் தவறவிட்டார்.  சுப்மன்கில் முயற்சிக்கு தக்க பலன் கிடைக்குமா? அல்லது இந்திய பந்துவீச்சை ப்ரூக் - ஸ்மித் ஜோடி தவிடுபொடியாக்குமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

தவறை சரி செய்யுமா இந்தியா?

கடந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டும், பந்துவீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தாதாலும், கேட்ச்களை கோட்டை விட்டதாலும் வெற்றி பெற வேண்டிய போட்டியில் தோல்வியை தழுவினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜோடியைப் பிரித்துவிட்டால் அதன்பின்பு கிறிஸ் வோக்ஸ் மட்டுமே ஆல்ரவுண்டர். அதன்பின்பு உள்ள ப்ரைடன் கார்ஸ், டங், ஷோயிப் பஷீர் பந்துவீச்சாளர்களே என்பதால் அவர்களை இந்திய அணி அவுட்டாக்குவது சிரமமாக இருக்காது. இதனால், இந்த ஜோடியின் விக்கெட் இந்திய அணிக்கு மிக மிக முக்கியம் ஆகும்.

Read Entire Article