IPL 2025: முதல் போட்டிக்கே ஆபத்தா! கொல்கத்தாவுக்கு ஆரஞ்சு அலர்ட்? அதிர்ச்சியில் ரசிகர்கள்

9 months ago 5
ARTICLE AD

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை நாளை(21.03.25) சனிக்கிழமை எதிர்கொள்ள உள்ளது . இந்த நிலையில் கொல்கத்தா வானிலை மையம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் 2025:

ஐபிஎல் 2025 இன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொடக்க ஆட்டம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  அணிகளுக்கு இடையே ஈடன் கார்டனில் நடைப்பெற உள்ளது. இதன் தொடக்க விழாவில் பாடகி ஸ்ரேயாஸ் கோஷல், கரண் அவுஜ்லா மற்றும் நடிகை திஷா பதானி போன்றோர் பாடல் மற்றும் நடன நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.

மழைக்கு வாய்ப்பு:

இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தெற்கு வங்காளத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கணித்துள்ளது. மார்ச் 22 ஆம் தேதி, ஐபிஎல் 2025 தொடக்க நாளில், ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, ஞாயிற்றுக்கிழமை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போட்டி நடைப்பெறுமா?

வானிலை மையத்தின் தகவலின்படி சனிக்கிழமை கொல்கத்தாவில் மழை பெய்ய 74% வாய்ப்பு உள்ளது, அதே நேரத்தில் மேகமூட்டம் 97% ஆக இருக்கும். மாலையில் மழை பெய்ய 90% வாய்ப்பு அதிகரிக்கிறது. எனவே, 18வது ஐபிஎல் போட்டியின் தொடக்க நாளில் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில்  மழை பெய்யும் என்பது கிட்டத்தட்ட உறுதி. ஒரு இல்லாமல் போட்டி தொடங்கினாலும் கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகள் போதுமான ஓவர்கள் விளையாடி முழு போட்டியும் நடைப்பெறுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

மாற்றப்பட்ட போட்டி:

ஏற்கெனவே, ஈடன் கார்டனில் ஒரு போட்டியின் தேதி  மாற்றியமைக்கப்பட உள்ளது. ஏப்ரல் 6 ஆம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டி   கவுகாத்திக்கு மாற்றப்பட உள்ளது, ஏனெனில் அன்று நகரில் 'ராம நவமி' கொண்டாட்டங்கள் இருப்பதால் ஐபிஎல் போட்டிக்கு பாதுகாப்பு வழங்க இயலாமையை போலீசார் வெளிப்படுத்தியுள்ளனர் என்று பெங்கால் கிரிக்கெட் சங்க  தலைவர் சினேகாஷிஷ் கங்குலி  தெரிவித்தார்.

"போட்டியை மீண்டும் திட்டமிடுமாறு பிசிசிஐ-க்கு நாங்கள் தெரிவித்துள்ளோம், ஆனால் போட்டியை தேதியை மாற்றுவதற்கு வாய்ப்பில்லை, இப்போது அது கவுகாத்திக்கு மாற்றப்படலாம் என்று சினேகாஷிஷ் கங்குலி  தெரிவித்தார். அன்று மாநிலம்  முழுவதும் 20,000க்கும் மேற்பட்ட ஊர்வலங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி அறிவித்திருந்த நிலையில் போட்டியானது வேறு இடத்திற்கு மாற்றப்படவுள்ளது.

Read Entire Article