IAS Officers Transfer: முதல்வர் விஜய்யின் அடுத்த மூவ் - காத்திருப்பு பட்டியலில் இருந்த உதயசந்திரனுக்கு முக்கியப் பொறுப்பு வழங்கிய தமிழக அரசு

3 weeks ago 4
ARTICLE AD

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத் தலைவராக உதயசந்திரனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்த நிலையில் இன்றும் சிலரை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தொழில்துறை முதலீட்டு கழக மேலாண் இயக்குநராக உதயசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நிதித்துறை செயலாளராக இருந்த உதயசந்திரன் மாற்றப்பட்டு சித்திக்கை நியமிக்கப்பட்டார். உதயசந்திரன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டது பேசுப்பொருளானது குறிப்பிடத்தக்கது.

மேலும், சுகாதாரத்துறை செயலாளராக தாரேஷ் அகமதுவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறை செயலாளராக அனு ஜார்ஜ் மற்றும் சமூக நலத்துறை செயலாளராக மரியம் பல்லவி பல்தேவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாற்றப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள்

நிதித்துறை செயலாளராக சித்திக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், உதயசந்திரனுக்காக பதிலாக மாற்றப்பட்டுள்ளார்.  வருவாய் நிர்வாக ஆணையராக முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சுற்றுலா வளர்ச்சி மற்றும் கலாச்சத்துறை செயலாளராக ஸ்வர்ணா, டாஸ்மாக் மேலாண் இயக்குனராக நந்தகுமாரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் அமுதா ஆகியோர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். முன்னாள் தலைமைச் செயலர் முருகானந்தம் தலைமைச் செயலராக இருந்தபோது தேர்தல் ஆணையத்தால் மாற்றப்பட்ட முருகானந்தத்துக்கு புதிய பணி வழங்கப்பட்டுள்ளது.

3ஆவது செயலர் நியமனம்

நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குநர் அண்ணாதுரை முதலமைச்சரிடம் மூன்றாவது செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர் விஜய்யின் தனிச் செயலாளர்களாக செந்தில் குமார், லட்சுமி பிரியா நியமிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கூடுதல் செயலர் நியமனம்

சிறப்பு திட்ட அமலாக்கத்துறை கூடுதல் செயலாளராக இருந்த விஷ்ணு முதலமைச்சரின் கூடுதல் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முதலமைச்சராக விஜய் பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். மாற்றப்பட்டுள்ள அதிகாரிகள் திமுக ஆட்சியில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article