Hyundai Cars: அடிமேல் அடி வாங்கிய ஹூண்டாய் கார்கள்.. ரூ.480 கோடி நஷ்டம்.. என்ன காரணம்?

3 months ago 4
ARTICLE AD

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் விற்பனை இந்தியாவில் 35.1 சதவீதம் சரிந்துள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் பின்னணிப் பற்றிக் காணலாம்.

ஹூண்டாய் கார்கள்

தென்கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய்  இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாகும். இந்தியச் சந்தையில் சிறந்த தொழில்நுட்பம், அதிநவீன பாதுகாப்பு வசதிகள் மற்றும் பட்ஜெட் முதல் பிரீமியம் வரையிலான பல்வேறு கார்களை ஹூண்டாய் நிறுவனம் தயார் செய்து சந்தையில் விற்பனைப்படுத்தி வருகிறது. ஹூண்டாயைப் பொறுத்தவரை Grand i10 Nios, i20,Exter, Venue, Creta, Alcazar, Aura, Verna ஆகிய கார்கள் விற்பனையில் உள்ளது. இவை வாடிக்கையாளர்களின் விருப்பமான தேர்வுகளில் முதன்மையானதாகவும் இருந்தது.

When the road to innovation meets the runway of couture, remarkable things happen.

For three years, Hyundai and India Couture Week have brought together the precision of innovation and the artistry of couture, celebrating design that inspires, captivates, and moves people. pic.twitter.com/RNabjA4RM1
— Hyundai India (@HyundaiIndia) July 20, 2026

விற்பனையில் கடும் சரிவு

இந்த நிலையில் 2026-2027ம் ஆண்டு நிதியாண்டில் முதல் காலாண்டு நிறைவடைந்துள்ளது. இதில் ஹூண்டாய் கார்கள் விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அந்நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 5.1 சதவீதம் சரிந்துள்ளது. இதன் மதிப்பு ரூ.888.6 கோடி என மதிப்பீடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு  ரூ. 1,369 கோடியாக இருந்த லாபம் கிட்டதட்ட ரூ.480 கோடி சரிவை கண்டுள்ளது.

என்ன காரணம்?

அதே சமயம், கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 13.3 சதவீதமாக இருந்த EBITDA லாப வரம்பு 9.3 சதவீதமாகச் சுருங்கி ரூ.1,511.7 கோடியாக குறைந்துள்ளது. மூலப்பொருள் மற்றும் செயல்பாட்டுச் செலவுகள் உள்ளிட்ட அதிகரித்த செலவுகள் லாப வரம்புகள் மீதான அழுத்தத்தை மேலும் கூட்டி வருவாயை குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தக் காலாண்டில் தங்களின் உள்நாட்டு விற்பனை வளர்ச்சி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5.4 சதவீதமாகக் குறைந்துள்ளதாக ஹூண்டாய்  நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் உற்பத்தி ஆலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அம்மாதத்தில் 13,900 வாகனங்களின் உற்பத்தி இழப்பு ஏற்பட்டது. மேற்கு ஆசியாவில் தொடரும் மோதல்களால் ஏற்றுமதிகள் பாதிக்கப்பட்டதால் நஷ்டம் ஏற்பட காரணங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. ஹூண்டாய் கார்களைப் பொறுத்தவரை ஜூன் காலாண்டில் உள்நாட்டு மொத்த விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 5.38 சதவீதம் அதிகரித்து 1,39,374 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் ஏற்றுமதி 19.6 சதவீதம் சரிந்து 38,708 யூனிட்டுகளாகக் குறைந்துள்ளது.

உற்பத்தி 100 சதவீதம் இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கும் நிலையில் இரண்டாம் காலாண்டில் நஷ்டம் உள்ளிட்டவை அனைத்தும் சரி செய்யப்படும் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Read Entire Article