முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுத்ததற்காக கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஒரு காலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தைப் பற்றி சட்டசபையில் பேசியவர். அந்த நிகழ்வைப் பற்றிக் காணலாம்.

முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல்

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மார்க்கண்டேயன். இவர் ஜூலை 18ம் தேதி தனது தொகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் விஜயை மிரட்டும் வகையில் பேசினார். இதனைத் தொடர்ந்து தவெக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இப்படியான நிலையில் பலரும் யார் இந்த மார்க்கண்டேயன் என இணையத்தில் தேடி வருகின்றனர்.

யார் இந்த மார்க்கண்டேயன்?

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த மார்க்கண்டேயன் மதுரை அரசு சட்டக் கல்லூரியில் தனது சட்டம் படித்தவர். இவர் மனைவி வழக்கறிஞர் என்ற நிலையில் மகனும் சட்டப்படிப்பு படித்து வருபவர். இதனிடையே கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அப்போதைய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை.

இதற்கிடையில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் மார்க்கண்டேயன் செயல்பட்டு வந்தார். 2019ம் ஆண்டு விளாத்திக்குளத்தில் இடைத்தேர்தல் வந்தது. அப்போது கட்சி தலைமையிடம் சீட் கேட்டார். ஆனால் எடப்பாடி பழனிசாமி மறுக்கவே, சுயேட்சை வேட்பாளராக களம் கண்டு தோல்வியை தழுவினார். இதற்கிடையில் கட்சி கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டதால் மார்க்கண்டேயன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

இதனால் டென்ஷனான அவர் நேராக திமுகவில் போய் இணைந்தார். 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு விளாத்திக்குளத்தில் வெற்றி பெற்றார். தொடர்ந்து 2026 சட்டமன்ற தேர்தலில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

Also Read: Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!

அன்று ஸ்டாலின் குடும்பத்தை விமர்சித்தவர்

இதற்கிடையில் 2016ம் ஆண்டு அதிமுக ஆட்சி முடிவதற்கு முன் பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அந்த இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தின் போது எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயன், திமுக பற்றியும், மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் குறித்தும் சில கருத்துக்களைத் தெரிவித்தார். இதனால் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடும் கோபமடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக தலைவரான ஸ்டாலின் பேச அதிமுக, திமுக இடையே கருத்து மோதல் ஏற்பட்டு சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டது. இப்படியான மார்க்கண்டேயன் தான் பின்னாளில் திமுகவில் சேர்ந்து இருமுறை சீட் பெற்று எம்.எல்.ஏ.வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.