Cylinder Price Cut: இன்று முதல் சிலிண்டர் விலை குறைப்பு.! ஆனால் விலை உயர்த்தியிருந்தது எவ்வளவு தெரியுமா?

11 months ago 7
ARTICLE AD

வணிக ரீதியிலாக பயன்படுத்தப்படும் சிலிண்டர்களின் விலையை, இன்று முதல் குறைப்பதாக, எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் அறிவிப்பு செய்துள்ளன.

விலை குறைப்பு :

2025 புது வருடம் தொடங்கிய நிலையில், எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் ( Oil Marketing Companies ) பல்வேறு மெட்ரோ நகரங்களில் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் சிலிண்டர்களின் விலையை குறைப்பு செய்துள்ளன. 19-கிலோ LPG சிலிண்டருக்கான விலையை  குறைக்கப்பட்ட நிலையில், 14.2 கிலோ எடைகொண்ட சிலிண்டரின் விலையில் மாற்றமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 5 மாதங்களாக விலை உயர்வு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது வணிகர்களிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

விலை குறைப்பு:

இந்திய நாட்டின் தேசிய தலைநகர் டெல்லியில் வணிக சிலிண்டர் விலையானது ரூ.1,804 ரூபாயாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.
மேலும், மும்பையில், புதிய விலை ரூ.1771ல் இருந்து ரூ.1756 ஆக குறைக்கப்பட்டது.

விமான எரிபொருள் (ATF) விலை கிலோ லிட்டருக்கு ₹1,401.37 அல்லது 1.54% குறைந்து, தேசிய தலைநகரில் ஒரு கிலோ லிட்டருக்கு ₹90,455.47 ஆக உள்ளது.

சில முக்கிய மெட்ரோ நகரங்களில் வணிக  ரீதியிலான சிலிண்டர்களின் விற்பனை விலை விபரங்கள்:

டெல்லி - ரூ.1,804
மும்பை - ரூ.1,756
சென்னை - ரூ.1,966
கொல்கத்தா - ரூ.1,911

உணவகங்கள் விலை:

வணிக ரீதியிலான சிலிண்டர் விலை மட்டுமே குறைப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலையானது குறைப்பு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வணிக ரீதியிலான சிலிண்டர் விலை குறைப்பால், உணவகங்கள்  உள்ளிட்ட இடங்களில் விலைவாசி சற்று குறைப்பு செய்யப்பட  வாய்ப்பு இருக்கிறது.

Also Read: TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!

உயர்வுக்குப் பிறகு பெரிய நிவாரணம்:

முன்னதாக, அரசுக்கு சொந்தமான எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் விமான எரிபொருள் மற்றும் வணிக எல்பிஜி சிலிண்டர்களுக்கான விலை உயர்வை டிசம்பர் 1 முதல் மாதாந்திர திருத்தத்தில் அறிவித்தன. இந்த மாற்றங்கள் உலகளாவிய எண்ணெய் விலை மற்றும் மாற்று விகிதத்தில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டது.

நிறுவனங்களின் தொடர்ச்சியான ஐந்து மாதாந்திர உயர்வுக்குப் பிறகு இந்தக் குறைப்பு வந்துள்ளது, ஆகஸ்டு முதல் மொத்தமாக ரூ.172.50 அதிகரித்ததாகவும் , தற்போது ரூ. 14.5 ரூபாய் குறைப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

Read Entire Article