Coimbatore Power Shutdown (30-01-2026): கோவை மக்களே உஷார்! நாளை இத்தனை இடங்கள்ல மின் தடையா? எங்கெல்லாம்? எப்போ வரை?

2 months ago 10
ARTICLE AD

ஈரோடு மாவட்டத்தில்  நாளை ( ஜனவரி 30, 2026, வெள்ளிக் கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் பல்வேறு பகுதிகளில், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாட்களில் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள்.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மின் விநியோகம் எங்கெங்கே தடை?

கீரநத்தம் - கீரநத்தம், வரதையங்கார்பாளையம், இடிகரை, அத்திபாளையம், சரவணம்பட்டி சில பகுதிகள், விஸ்வாசபுரம், வருவாய்நகர், கரண்டுமேடு, வில்லங்குறிச்சி அருகே சில பகுதிகள், சிவானந்தபுரம், சத்தியரோடு, சங்கரவீதி, ரவி தியேட்டர், வின் பகுதி

படுவம்பள்ளி - படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம்

சோமையம்பாளையம் - சோமையம்பாளையம், யமுனாநகர், காளப்ப நாயக்கன் பாளையம், ஜிசிடி நகர், கணுவாய், கேஎன்ஜி புதூர், தடாகம் சாலை, சேரன் இண்டஸ்ட்ரீஸ் பகுதி, வித்யா காலனி, சாஜ் கார்டன், விஎம்டி நகர், டீச்சர்ஸ் காலனி, நமீதா காலனி

இருகூர் - இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, பள்ளபாளையம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (ஒரு மண்டலம்), சின்னியம்பாளையம், வெங்கிடாபுரம், தொட்டிப்பாளையம், கோல்ட்வின்

மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

Read Entire Article