CM Vijay: அதிமுகவில் இருந்து தவெகவுக்கு 36 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு.. நாஞ்சில் சம்பத் ஓபன் டாக்!

3 weeks ago 5
ARTICLE AD

எங்கள் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதனை எதிர்கொள்வோம் என தமிழக வெற்றிக் கழக நிர்வாகி நாஞ்சில் சம்பத் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளது. விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.

இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய தவெக கொள்கைப் பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத், “விஜய் அடைந்துள்ள வெற்றியில் என்னுடைய பங்களிப்பு இருந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் ஆட்சியமைப்பார் என்பதை முதலில் அறிவித்தது நான் தான். இன்னும் கொஞ்சம் கால அவகாசம் இருந்தால், செலவழிக்க வாய்ப்புள்ள வேட்பாளர்கள் களத்தில் இருந்திருந்தால் 200 தொகுதிகளில் வென்றிருப்போம். அந்த குறைபாடு எங்களுக்கு இருந்தது. களத்தில் இருந்த வேட்பாளர்கள் தங்களின் எல்லா சக்திகளையும் செலவழித்து களப்பணியாற்றினார்கள்.

விஜய் விருகம்பாக்கம் தொகுதியில் தன் ஓட்டுநரின் மகனான சபரிநாதனுக்கு வாய்ப்பு வழங்கினார். முந்தைய திமுக எம்.எல்.ஏ.,வான தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா மகனான பிரபாகர் ராஜா மீது மக்களுக்கு மிகப்பெரிய ஆத்திரமும் கோபமும் இருந்தது. அதனால் நாம் செலவழிக்க பணம் இல்லை என்ற கவலையில்லாமல் வீடு, வீடாக சென்று வாக்கு கேளுங்கள்.

கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என சொன்னேன். அது நடந்து விட்டது. அதேபோல் தமிழ்நாட்டின் பெரும்பாலான தொகுதிகளில் சாமானிய வேட்பாளர்கள் தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள். சாதி, சமயம் இல்லாமல் வேட்பாளர்களை தேர்வு செய்திருக்கிறார். எம்ஜிஆருக்கு ஆட்சிக்கு வர 5 ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால் விஜய்க்கு 3 ஆண்டுகளுக்கும் குறைவாகவே தேவைப்பட்டு வரலாறு படைக்கப்பட்டது.

முதல் வாக்குறுதியாக 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்பது உண்மையில் பல மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. தமிழ்நாடு கருவூலம் காலியாகத்தான் உள்ளது. இதனை சரிசெய்ய விஜய் என்ன திட்டம் வைத்திருக்கிறார் என தெரியவில்லை. இனிமேல் தான் வருவாயை பெருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை ஆலோசிக்கும் பொருட்டு தான் கால அவகாசம் கேட்டுள்ளார். மு.க.ஸ்டாலினை காயப்படுத்த வேண்டும் என்பது நோக்கம் இல்லை. வெள்ளை அறிக்கை கொடுப்பதாக விஜய் சொல்லியிருக்கிறார். அப்போது தமிழ்நாடு அரசின் நிலவரம் தெரிய வந்து விடும்.

மு.க.ஸ்டாலின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் பேபியிடம் அதிமுக ஆட்சியமைக்க ஆதரவு கொடுங்கள் என சொல்லியது எவ்வளவு கேவலம் தெரியுமா?.. ஆனால்  நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கேட்கவில்லை. மதச்சார்பற்றவர்கள் என்பதால் தான் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளிடம் ஆதரவு கேட்டோம். எங்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் எதிர்கொள்வோம். அதிமுகவில் இருந்து 36 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு கொடுக்கப் போகிறார்கள். அதிமுக இரண்டாக பிரிந்து விட்டது. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் பெரும்பான்மையை நிரூபிப்போம்” என தெரிவித்துள்ளார்.

Read Entire Article