Cinema Headlines August 15 : பாராட்டுகளை குவிக்கும் 'தங்கலான்'... விஜயின் சுதந்திர தின கொண்டாட்டம்... இன்றைய சினிமா செய்திகள்

1 year ago 7
ARTICLE AD

தங்கலான் ட்விட்டர் ரிவ்யூ :

பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோரின் நடிப்பில் உருவான 'தங்கலான்' திரைப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று  வெளியானது. தங்கலான் படம் பார்த்த ரசிகர்கள் விக்ரமை பாராட்டி வருகின்றனர். குறிப்பாக, பல ரசிகர்கள் விக்ரம் நடிகர் கமலையே மிஞ்சும் அளவிற்கு நடித்துள்ளார் என்று பாராட்டியுள்ளனர். படம் தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

ஜோதிகா பிட்னெஸ் :

தமிழ் சினிமாவின் முக்கியமான  நடிகையான ஜோதிகா சமீபத்தில் பாலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுத்து அங்கு பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஒரு வருடமாக தீவிரமான உடற்பயிற்சி மற்றும் உடல்நலம் சார்ந்த வீடியோக்களை வெளியிடும் ஜோதிகா, சுதந்திர தின ஸ்பெஷல் செய்தியாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பகிர்ந்து இருந்தார். அதில் "இந்த சுதந்திர நாளில், நாம் அனைவரும் பிறரை சாராமல் நிற்கும் தன்மையை பெற உறுதியெடுப்போம்" என பதிவிட்டு அசுர வேக உடற்பயிற்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தங்கலான்’ கெட்டப்பில் ரசிகர்கள் :

ப. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'தங்கலான்' திரைப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாசிட்டிவ் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. விக்ரமின் நடிப்பை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் திருச்சி தெப்பக்குளம் அருகே உள்ள LA சினிமாஸில் திரையரங்கில் படத்தை காண வந்த சில ரசிகர்கள் தங்கலான் படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் போல வேடமிட்டு வந்திருந்தனர். அவர்களை பார்த்து உற்சாகம் அடைந்த மற்ற ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர். இருப்பினும் திரையரங்க நிர்வாகம் மேலாடை இன்றி உள்ளே வரக்கூடாது என தடுத்து நிறுத்தி மேலாடை அணிந்த பின்னர் தான் உள்ளே அனுமதித்தனர்.

விஜய் சுதந்திர தின கொண்டாட்டம் :

இன்று இந்தியா முழுவதும் 78வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தன்னுடைய சோசியல் மீடியா பக்கம் மூலம் பதிவு ஒன்றை பகிர்ந்து சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். மேலும் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் தேசிய கொடியை ஏற்றி கொண்டாடினார். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகின.

டிமாண்டி காலனி 2 :

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் அருள்நிதி, அருண் பாண்டியன், நடிகைகள் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் இன்று வெளியான ஹாரர் திரைப்படம் 'டிமாண்டி காலனி 2'. நல்ல வரவேற்பையும் பாசிட்டிவ் விமர்சனங்களையும் பெற்று வரும் இப்படத்தை காண வந்த தயாரிப்பாளரின் ஐடி நிறுவன ஊழியர்கள் பேய் வேடம் அணிந்து வந்து படத்தை பார்த்தனர். இது மக்களை வெகுவாக கவர்ந்தது.

Read Entire Article