Cigarettes Price Hike: புகை வண்டிகளே..! இன்று முதல் சிகரெட், குட்கா விலை உயர்வு அமல் - எதற்கு? எவ்வளவு கூடுதல் செலவு?

2 months ago 9
ARTICLE AD

Cigarette Gutkha Prices: சிகரெட் மற்றும் குட்கா மீது இன்றுமுதல் புதிய கலால் மற்றும் சுகாதார வரி அமலுக்கு வந்துள்ளது.

சிகரெட், பான் மசாலா மீது புதிய வரி அமல்

மத்திய அரசின் அறிவிப்பின்படி சிகரெட், புகையிலை மற்றும் பான் மசாலா போன்ற பொருட்களின் மீது, புதிய வரி நடைமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ”பாவப் பொருட்கள்” என்று அழைக்கப்படும் இந்த பொருட்களின் மீதான ஒழுங்குமுறைகளை கடுமையாக்குவதையும், வரி அளவை அதிகமாக வைத்திருப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் மீது இன்று முதல் கூடுதல் கலால் வரி விதிக்கப்படும் நிலையில், பான் மசாலா மீது புதிய சுகாதார மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் வரி வசூலிக்கப்படுகிறது.

புதிய வரி எவ்வளவு?

பழைய வரி நடைமுறையின்படி, இந்த பொருட்களின் மீது 28 சதவிகித ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டது. அதோடு, கடந்த 2017ம் ஆண்டு ஜுலை மாதம் ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு இழப்பீட்டு செஸ் வரியும் வசூலிக்கப்பட்டு வந்தது. புதிய வரி நடைமுறையின்படி, பான் மசாலா மீதான ஒட்டுமொத்த வரிச்சுமை, 40 சதவிகித ஜிஎஸ்டி உட்பட, தற்போதைய 88 சதவிகித அளவிலேயே இருக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் மீதான விலை மட்டும் கணிசமாக உயரக்கூடுமாம்.

விலை எவ்வளவு உயரும்?

உயரம் மற்றும் வகை அடிப்படையில் சிகரெட்டின் விலை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 65 மில்லி மீட்டர் உயரம் வரையிலான நான் - ஃபில்டர் சிக்ரெட் கூடுதலாக சுமார் ரூ.2.05 வரையிலான கூடுதல் எக்செஸ் வரியை பெறக்கூடும். இதனிடையே, அதே உயரம் கொண்ட ஃபில்டர் சிகரெட்டின் விலை ஒரு துண்டுக்கு சுமார் ரூ.2.10 வரை உயரக்கூடுமாம். 65 முதல் 70 மில்லி மீட்டர் உயரம் வரையிலான சிகரெட்டிற்கு சுமார் ரூ.3.60 முதல் ரூ.4 வரையும், நீளமான மற்றும் ப்ரீமியம் சிகரெட்களான 70 முதல் 75 மில்லி மீட்டர் நீளம் கொண்ட மாடல்கள் மீது ரூ.5.40 வரை விலை உயரக்கூடுமாம். அதிகபட்சமாக வழக்கத்திற்கு மாறான அல்லது நிலையான டிசைனுடன் ஒட்டாத சிகரெட்கள் மீது ரூ.8.50 வரை விலை உயர்த்தப்படுகிறது. அதன்படி, மிகவும் பிரபலமான சிகரெட்கள் பெரும்பாலும் இந்த அதிகப்படியான வரி வரம்ப்புக்குள் வராது என்றும், ஒரு சில ப்ராண்ட்கள் மட்டுமே இதில் இடம்பெறும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெல்லும் வகையிலான புகையிலை பொருட்கள் மீது 82 சதவிகித வரியும், குட்கா மீது 91 சதவிகித வரியும், பான் மசாலா ஒட்டுமொத்தமாக 88 சதவிகித வரியும் விதிக்கப்படுகிறது.

புதிய ஜிஎஸ்டி கணக்கிடும் முறை:

மெல்லும் புகையிலை, ஃபில்டர் கைனி, ஜர்தா வாசனை புகையிலை மற்றும் குட்கா போன்ற பல புகையிலை பொருட்களுக்கு அரசாங்கம் புதிய MRP அடிப்படையிலான மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்துகிறது. இதன்படி இனி, தொழிற்சாலை மதிப்புக்கு பதிலாக, பாக்கெட்டில் அச்சிடப்பட்ட சில்லறை விலையின் அடிப்படையில் ஜிஎஸ்டி கணக்கிடப்பட உள்ளது. இந்த நடவடிக்கை வரி ஏய்ப்பைக் குறைத்து வருவாய் வசூலை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article