Cheapest Sub-Compact SUV Nissan Magnite: நிசான் மேக்னைட் கார் மாடலின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

நாட்டின் மலிவான சப்-காம்பேக்ட் எஸ்யுவி

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எஸ்யுவிக்களின் விற்பனை என்பது மிகப்பெரிய அளவில் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. மைக்ரோ எஸ்யுவிக்கள் அளவில் சிறியதாகவும், காம்பேக்ட் எஸ்யுவிக்கள் பட்ஜெட்டில் அணுகுவதற்கும் கடினமானதாக இருக்கும். இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட பிரிவில் தரமான காரை தேடுபவர்களுக்கான வாய்ப்பாக தான் சப்-காம்பேக்ட் எஸ்யுவிக்கள் திகழ்கின்றன. நான்கு மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட இந்த கார்கள், பணத்திற்கு நிகரான மதிப்பை வழங்கும் ஒரு நல்ல எஸ்யுவி பயண அனுபவத்தை வழங்குகின்றன. அந்த வகையில் நாட்டிலேயே மலிவான விலையில் கிடைக்கும் மிகவும் பாதுகாப்பான சப்-காம்பேக்ட் எஸ்யுவி ஆன நிசான் மேக்னைட்டை, எளிய முறையில் சொந்தமாக்குவதற்கான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

நிசான் மேக்னைட் - விலை வரம்பு

பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் நிசான் மேக்னைட் கார் மாடலின் விலையானது ரூ.5.65 லட்சத்தில் தொடங்கி ரூ.10.96 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நீள்கிறது. இதன் எண்ட்ரி லெவல் காரின் ஆன் ரோட் விலையானது சென்னையில் சுமார் 6 லட்சத்து 81 ஆயிரமாக உள்ளது. இதில் எக்ஸ் ஷோரூம் விலை சுமார் 5 லட்சத்து 65 ஆயிரம், பதிவுக் கட்டணம் சுமார் ரூ.78 ஆயிரம், காப்பீட்டு கட்டணம் சுமார் 31 ஆயிரம் ரூபாய் மற்றும் இதர கட்டணம் சுமார் 7 ஆயிரம் ஆகியவை அடங்கும்.

நிசான் மேக்னைட் - EMI விவரங்கள்

பொதுவாகவே வங்கிக் கடன் உதவியுடன் காரை வாங்க விரும்புபவர்கள், பெருந்தொகையை முன்பணமாக செலுத்துவிட்டு, கணிசமான தொகையை கடனமாக பெறுவதே லாபகரமானது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதன் மூலம் நீண்ட கால கடன்சுமை மற்றும் வட்டி செலவை பெரிய அளவில் குறைக்க முடியும். அதோடு, நல்ல சிபில் ஸ்கோரை வைத்திருப்பதன் மூலம், வங்கிகள் 7.45 வட்டி சதவிகிதத்தில் இருந்து கூட வாகன கடன் வழங்க முன்வருகின்றன. அந்த வகையில் சுமார் ரூ.3.81 லட்சத்தை முன்பணமாக செலுத்தி நிசான் மேக்னை காரின் எண்ட்ரி லெவல் வேரியண்டை தேர்வு செய்தால், மீதமுள்ள சுமார் ரூ.3 லட்சத்திற்கு மட்டுமே நீங்கள் கடனுதவியை அணுக வேண்டி இருக்கும்.

அந்த வகையில் 8 சதவிகித வட்டியுடன் 5 ஆண்டுகளுக்கு கடனை திருப்பி செலுத்த முடிவு செய்தால், மாதம் நீங்கள் சுமார் 6 ஆயிரm ரூபாயை தவணையாக செலுத்த வேண்டி இருக்கும். அசலுடன் கூடுதலாக வட்டியாக சுமார் 65 ஆயிரத்தை செலுத்தி இருப்பீர்கள். ஒட்டுமொத்தமாக சுமார் ரூ.7.74 லட்சத்தை செலுத்தி இந்த சப்-காம்பேக்ட் எஸ்யுவியை நீங்கள் சொந்தமாக்கிக் கொள்ளலாம். ஒருவேளை முன்தொகையை அதிகமாக செலுத்தினால் உங்களது வட்டி சுமை மற்றும் மாதாந்திர தவணை வெகுவாக குறையக்கூடும். குறைந்தபட்சமாக ரூ.1.73 லட்சத்தை முன்பணமாக செலுத்தினால் ஆண்டுக்கு 10 சதவிகித வட்டியில் 5 ஆண்டுகளுக்கு மாதம் சுமார் 10 ஆயிரத்து 800 ரூபாயை தவணையாக செலுத்த வேண்டி இருக்கும்.

இதையும் படியுங்கள்: Cheapest Diesel MPV: நாட்டின் மலிவான டீசல் எம்பிவி - 5 ஸ்டார் ரேட்டிங், 6 & 7 சீட்டர், 870KM மைலேஜ் - EMI விவரங்கள்

நிசான் மேக்னைட் - 24KM மைலேஜ்

நிசான் மேக்னைட் கார் மாடலானது 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினை 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் 5 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கொண்டுளது. இந்த ஆப்ஷனில் சிஎன்ஜி வசதியும் உள்ளது. மேலும், பஞ்சி 100PS டர்போ பெட்ரோல் இன்ஜினை 5 ஸ்பீட் மேனுவல் அல்லது சிவிடி ஆட்டோமேடிக் ஆப்ஷனில் கொண்டுள்ளது. பெட்ரோல் எடிஷன் லிட்டருக்கு 17.9 முதல் 19.9 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது. அதேநேரம், சிஎன்ஜி எடிஷன் கிலோவிற்கு 24 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிஜ உலக பயன்பாட்டில் நகரங்களில் 17 முதல் 19 கிலோ மீட்டரும், நெடுஞ்சாலைகளில் 21 முத்ல் 23 கிலோமீட்டரும் மைலேஜ் வழங்குகிறதாம்.

நிசான் மேக்னைட் - அம்சங்கள், வசதிகள்

மலிவு விலையில் கிடைப்பதால் போதுமான அம்சங்கள் இருக்காது என கருத வேண்டாம். வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ உடன் கூடிய 8 இன்ச் டச்ஸ்க்ரீன், பின்புற ஏசி வெண்ட்களுடன் கூடிய முழுமையான ஆட்டோமேடிக் க்ளைமேட் கன்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங், ஆம்பியண்ட் லைட்டிங், டாப் வேரியண்ட்களில் காற்று சுத்திகரிப்பான்கள் ஆகிய வசதிகள் இடம்பெற்றுள்ளன. இதுபோக 60:40ஸ்ப்லிட் ரியர் சீட்கள், சென்டர் ஆர்ம்ரெஸ்ட் ஆகியவையும் உள்ளன.

நிசான் மேக்னைட் - 5 ஸ்டார் ரேட்டிங்

நிசான் மேக்னைட் கார் மாடலானது சர்வதேச அளவிளான பாதுகாப்பு பரிசோதனையில் பெரியவர்களுக்கான பிரிவில் 5 ஸ்டார் ரேட்டிங்கையும், சிறியவர்களுக்கான பிரிவில் 3 ஸ்டார் ரேட்டிங்கையும் கொண்டுள்ளது. இதற்காக 6 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், அனைது பயணிகளுக்கும் 3 பாயிண்ட் சீட் பெல்ட்கள், மேம்படுத்தப்பட்ட பாதசாரிகள் பாதுகாப்பு, ரியர் பார்கிங் சென்சார், ஆண்டி லாக் ப்ரேக்கிங் சிஸ்டம் மற்றும் ட்ராக்‌ஷன் கன்ட்ரோல் போன்ற அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சப்-காம்பேக்ட் பிரிவில் மிகவும் பாதுகாப்பான கார் மாடல்களில் ஒன்றாக நிசான் மேக்னைட் திகழ்கிறது.