Car Sale: மஹிந்த்ராவை பொளந்த டாடா..! சிக்கித் தவிக்கும் ஹுண்டாய் - டொயோட்டா, கியா காட்டில் மழை - மாருதி?

2 months ago 6
ARTICLE AD

Car Sales Jan 2026: ஜனவரி மாத கார் விற்பனையில் ஹுண்டாயின் வென்யு மற்றும் ஆரா போன்ற கார் மாடல்கள் சிறந்த விற்பனையை பதிவு செய்துள்ளன.

ஜனவரி மாத கார் விற்பனை விவரம்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், ஜனவரி மாதத்தில் பல கார் உற்பத்தி நிறுவனங்கள் வலுவான விற்பனையை பதிவு செய்துள்ளன. உள்நாட்டு விற்பனையில் மஹிந்த்ரா மற்றும் ஹுண்டாய் நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி, டாடா நிறுவனம் மாத விற்பனையில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. நெக்ஸான் மற்றும் அண்மையில் வெளியிடஃப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட பஞ்ச் கார்களுக்கான தேவை அதிகரிப்பின் காரணமாக, உள்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் ஒரே மாதத்தில் ஒட்டுமொத்தமாக 70 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்களை விற்பனை செய்துள்ளது. மஹிந்த்ரா மற்றும் ஹுண்டாய் நிறுவனங்கள் முறையே 63 ஆயிரம் மற்றும் 59 ஆயிரம் யூனிட்களை விற்பனை செய்து மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களை பிடித்துள்ளன.

சரிந்தாலும் ராஜா தான்...

கடந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் பதிவான 211,074 யூனிட்களை காட்டிலும், கடந்த ஜனவரியில் மாருதியின் உள்நாட்டு விற்பனை 13 சதவிகிதம் சரிந்து ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 633 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. ஜனவரி மாதத்திற்கான கார் விற்பனை பட்டியலில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சரிவை சந்தித்த ஒரே நிறுவனமாகவும் மாருதி உள்ளது. ஆனாலும், தொடர்ந்து ஒட்டுமொத்த விற்பனையில் மாருதி முதலிடம் வகிக்கிறது.

விற்பனையில் புதிய உச்சம் தொடட்ட டாடா

கடந்த ஆண்டின் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டின் முதல் மாதத்தில், 46 சதவிகித கூடுதல் விற்பனையை உள்நாட்டில் டாடா பதிவு செய்துள்ளது. அதன்படி, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் உள்நாட்டில் 48 ஆயிரத்து 76 யூனிட்கள் விற்பனையான நிலையில், நடப்பாண்டில் அந்த எண்ணிக்கை 70,222 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம், டிசம்பரில் பதிவான 50 ஆயிரத்து 46 யூனிட்களை காட்டிலும் கிட்டத்தட்ட 20 ஆயிரம் யூனிட்கள் அதிகமாகும். கடந்த மாதத்தில் மட்டும் நெக்ஸான் 23 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்களும், பஞ்ச் 19 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்களும் விற்பனையாகியுள்ளன. ஒட்டுமொத்தமாக 7 லட்சம் யூனிட்களை கடந்த பஞ்ச், கடந்த ஓராண்டில் மட்டும் 2 லட்சம் யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. புதிய சியாரா மற்றும் ஹாரியர் & சஃபாரி பெட்ரோல் எடிஷன்களும் நல்ல விற்பனைய பதிவு செய்துள்ளதாக டாடா தெரிவித்துள்ளது.

மஹிந்த்ரா & மஹிந்த்ரா

மஹிந்த்ரா நிறுவனம் கடந்த ஆண்டின் ஜனவரி மாதத்தை காட்டிலும், கடந்த ஜனவரி மாதத்தில் விற்பனையில் 25 சதவிகித வளர்ச்சியை கண்டுள்ளது. அதன்படி உள்நாட்டில் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவான 50 ஆயிரத்து 659 யூனிட்களில் இருந்து, ப்ராண்டின் விற்பனையானது கடந்த ஜனவரியில் 63 ஆயிரத்து 510 யூனிட்களாக பதிவாகியுள்ளன. கடந்த டிசம்பரில் நிறுவனத்தின் விற்பனை 50 ஆயிரத்து 946 யூனிட்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

ஹுண்டாய்

ஹுண்டாய் நிறுவனம் இதுவரை எந்தவொரு மாதத்திலும் இல்லாத அளவிலான மிகப்பெரிய விற்பனையை கடந்த ஜனவரியில் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டின் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 9.5 சதவிகிதம் அதிகரித்து 59 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்களை பதிவு செய்துள்ளது. கடந்த டிசம்பரில் பதிவானதை காட்டிலும் 39 சதவிகிதம் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட 14 ஆயிரத்து 30 யூனிட்களுடன் சேர்த்து, ப்ராண்டின் ஒட்டுமொத்தம் விற்பனையானது 73 ஆயிரத்து 137 யூனிட்களை எட்டியுள்ளது. இதுவும் நிறுவனம் இதுவரை எட்டாத உச்சமாகும்.  சப்-காம்பேக்ட் எஸ்யுவி வென்யு மற்றும் சப்காம்பேக்ட் செடான் ஆரா ஆகியவை முறையே, 12,413 மற்றும் 7,978 யூனிட்களுடன், இதுவரை இல்லாத அளவிலான சிறந்த மாதாந்திர விற்பனைய பதிவு செய்துள்ளன.

ஜனவரி 2026 கார் ப்ராண்ட்களின் விற்பனை

ப்ராண்ட்

ஜன.2025 உள்நாட்டு விற்பனை

ஜன. 2026 உள்நாட்டு விற்பனை

சதவிகிதம்

மாருதி

211,074 யூனிட்கள்

183,633 யூனிட்கள்

-13

டாடா

48,076 யூனிட்கள்

70,222 யூனிட்கள்

46

மஹிந்த்ரா

50,659 யூனிட்கள்

63,510 யூனிட்கள்

25

ஹுண்டாய்

54,003 யூனிட்கள்

59,107 யூனிட்கள்

9.5

டொயோட்டா

26,178 யூனிட்கள்

30,630 யூனிட்கள்

17

கியா

25,025 யூனிட்கள்

27,603 யூனிட்கள்

10.3

டொயோட்டா

மற்றொரு ஜப்பான் நிறுவனமான டொயோட்டா கடந்த ஆண்டின் ஜனவரி மாதம் விற்பனையான 26 ஆயிரத்து 178 யூனிட்களிலிருந்து, 17 சதவிகிதம் வளர்ச்சி கண்டு, 30 ஆயிரத்து 630 யூனிட் விற்பனையை எட்டியுள்ளது. வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியும் 2 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்து 3 ஆயிரத்து 250 யூனிட்களாக பதிவாகியுள்ளது.

கியா

கியா நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனையானது கடந்த ஜனவரியில் 27 ஆயிரத்து 603 யூனிட்களை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு ஜனவரியில் பதிவான விற்பனையை காட்டிலும் 10.3 சதவிகிதம் அதிகமாகும். ப்ராண்டின் சப்-காம்பேக்ட் எஸ்யுவி ஆன சோனெட், காரென்ஸ் க்ளாவிஸ், க்ளாவிஸ் மின்சார எம்பிவி ஆகியவை விற்பனையில் நல்ல பங்களிப்பை வழங்கியுள்ளன. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை செல்டோஸ் மாடலுக்கான முன்பதிவும் வலுவாக உள்ளதாக கியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article