Car Fuel For City Traffic: நகரங்களில் நிலவும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, பெட்ரோல், டீசல், EV மற்றும் CNG-யில் எந்த எரிபொருள் ஏதுவாக இருக்கும் என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்:

வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நகர்ப்புறங்களில் பொதுமக்கள் குடியேறுவது தீவிரமாக உள்ளது. இதனால் ஏற்படும் முக்கிய சிக்கல்களில் ஒன்று அதிகப்படியான போக்குவரத்து நெரிசல். அதில் காரை ஓட்டிச் செல்வது என்பது அவ்வளவு எளிய காரியமல்ல. திடீரென பிரேக் அடிப்பது, வாகனத்தை நிறுத்தி உடனே ஸ்டார்ட் செய்வது என, தேய்மானத்திற்கான சம்பவங்கள் அடிக்கடி நடக்கும். இதனால் அதிகரிக்கும் இன்ஜினில் வேலைப்பளுவால் எரிபொருள் செயல்திறனும் குறைகிறது. அப்படி நடந்தால் எரிபொருளுக்கான செலவு என்பது அதிகரிக்கிறது. இந்நிலையில் நகர்ப்புற பயன்பாட்டிற்கு பெட்ரோல், டீசல், சின்ஜி மற்றும் மின்சாரம் ஆகிய எரிபொருட்களில் எது சிறந்தது? என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

இதையும் படியுங்கள்: Xiaomi YU7: 72 மணி நேரத்தில் 3 லட்சம் பேர் முன்பதிவு - என்னயா கார் இது? ஈயாய் மொய்த்த கூட்டம், 62 வாரங்களா?

EV Vs CNG - கடும் போட்டி

பெட்ரோல் , டீசலை விவாதத்திலிருந்து பின்னுக்கு தள்ளி, போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்ப்புறங்களுக்கு ஏற்ற எரிபொருளுக்கான பட்டியலில் மின்சாரம் மற்றும் சிஎன்ஜி இடையே கடும் போட்டி நிலவுகிறது. டெயில் பைப்பிலிருந்து எந்தவொரு உமிழ்வையும் வெளியேற்றாத மின்சார காருக்கு, எரிபொருளுக்கான செலவும் குறைவாகவே உள்ளது. அதேநேரம், குறைந்த செலவிற்கு வழிவகுக்கக்கூடிய சிஎன்ஜி கார்கள், பெட்ரோல் மற்றும் டீசலுடன் ஒப்பிடுகையில் குறைந்த உமிழ்வையே வெளிப்படுத்துகிறது. உடனடியான ஸ்டாப் மற்றும் ஸ்டார்ட் சூழல் மிகுந்த நகர்ப்புற பயன்பாட்டிற்கு செயல் திறன் மிக்க பெட்ரோல் வாகனங்களும் சரியான தேர்வாக இருக்கும். பொதுவாக டீசல் கார்கள் நீண்ட தூர பயணங்களுக்கு மட்டுமே நல்ல பலனை அளிக்கிறது.

பெஸ்ட் எரிபொருள் - பெட்ரோல் Vs டீசல் Vs EV Vs CNG Vs ஹைப்ரிட்:

அம்சங்கள்

பெட்ரோல்

டீசல்

சிஎன்ஜி

மின்சாரம்

ஹைப்ரிட்

உமிழ்வு

மிதமானது

அதிகம்

குறைவு

டெயில் பைப்பில் ஜிரோ உமிழ்வு

பெட்ரோல், டீசலை காட்டிலும் குறைவு

எரிபொருள் செயல்திறன்

மிதமானது

அதிகம்

அதிகம்

மிகவும் அதிகம்

அதிகம்

அணுகல்

எளிதானது

எளிதானது

கணிசமான நிலையங்கள்

மிகவும் கணிசமான நிலையங்கள்

கணிசமான வாய்ப்புகள்

நிரப்புதல் / சார்ஜிங் நேரம்

வேகமானது

வேகமானது

கணிசமான நேரம்

அதிக நேரம் செலவாகும்

மிதமான நேரம்

ரேஞ்ச்

அதிகம்

அதிகம்

மிதமானது

கணிசமானது

அதிகம்

கொள்முதல் விலை

குறைந்த விலை

அதிகம்

மிதமானது

மிகவும் அதிக செலவு

பெட்ரோல், டீசலை காட்டிலும் அதிகம்

எரிபொருட்களின் நன்மை, தீமைகள்:

மின்சார வாகனங்கள்:

நன்மை: டெயில் பைப்களில் குறைந்த உமிழ்வு வெளியீடு, குறைந்த எரிபொருள் செலவு குறிப்பாக நகர்ப்புறங்களில், குறைந்த பராமரிப்பு, வரிக்கு ஊக்கத்தொகை

சிக்கல்: அதிகப்படியான கொள்முதல் விலை, குறைந்த ரேஞ்ச் மற்றும் சர்ஜிங்கிற்கான உட்கட்டமைப்பு வசதிகள், வண்டியின் பேட்டரி தீர்ந்து பாதியில் நின்று விடுமோ என்ற அச்சம்

சிஎன்ஜி வாகனங்கள்:

நன்மை: பெட்ரோல் மற்றும் டீசலை காட்டிலும் குறைந்த எரிபொருள் செலவு மற்றும் குறைந்த உமிழ்வு, குறைந்த வேகத்தில் பயணிக்கும்போது ஏற்படும் விபத்துகளின்போது பாதுகாப்பு உறுதி செய்யப்படும்

சிக்கல்கள்: சிஎன்ஜி நிரப்புவதற்கான போதிய வசதிகள் இல்லை, சற்றே உயர்ந்த பராமரிப்பு செலவு, பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் நாட்கள் செல்ல செல்ல வாகனத்தின் செயல்திறன் குறைய வாய்ப்புள்ளது.

பெட்ரோல் வாகனங்கள்:

நன்மைகள்: நகர பயன்பாட்டிற்கு ஏற்றது, உடனடியாக எரிபொருள் கலனில் நிரப்ப முடியும், ஸ்டாப் & ஸ்டார்ட் சூழல் மிக்க போக்குவரத்து நெரிசலில் கூட நல்ல செயல்திறன் கொண்டது

சிக்கல்கள்: சிஎன்ஜி மற்றும் மின்சார வாகனங்களுடன் ஒப்பிடுகையில் எரிபொருள் செலவு அதிகம். அதேநேரம், அந்த வாகனங்களை காட்டிலும் கூடுதல் உமிழ்வு திறன் கொண்டது.

டீசல் வாகனங்கள்:

நன்மைகள்: நீண்ட தூர பயணங்களின் போது நல்ல செயல்திறன் கொண்டவையாக விளங்குகின்றன.

சிக்கல்கள்: மற்ற மூன்று வகையான எரிபொருட்களுடன் ஒப்பிடுகையில் அதிகப்படியான உமிழ்வை வெளிப்படுத்தக்கூடியது. சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய சில உமிழ்வுகளுக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், பொதுவாக நகர ஓட்டுதலுக்கு டீசல் ஏற்றதல்ல.