Budget 2026: தேர்தல் வரும் மாநிலங்களுக்கு பெப்பே.. பட்ஜெட்டில் ஏமாற்றியதா பாஜக அரசு?

2 months ago 9
ARTICLE AD

Union Budget 2026: மத்திய அரசின் 2026-27ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை இன்று நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் மீது நாடே மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தது. தங்கம் விலை குறைப்பு, வருமான வரி குறைப்பு, விலைவாசி கட்டுப்பாடு போன்ற பல்வேறு எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் இருந்தது.

தேர்தல் எதிர்கொள்ளும் மாநிலங்கள்:

ஆனால், சாமானிய மக்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இதுமட்டுமின்றி நடப்பாண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களுக்கு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்பார்ப்புகள் ஏமாற்றம்:

ஆனால், இந்த மாநிலங்களுக்கு எந்தவொரு தனித்துவமான அறிவிப்புமே பட்ஜெட்டில் வெளியாகவில்லை. இது அனைவருக்குமே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 234 தொகுதிகளை கொண்ட தமிழ்நாட்டில் பாஜக எதிர்க்கட்சியான அதிமுக-வுடன் தமிழ்நாட்டில் கூட்டணி வைத்துள்ளது. கடந்த முறை 4 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக இந்த தேர்தலிலும் வெற்றி பெறும் நோக்கத்துடன் களமிறங்கியுள்ளது.

ஆனால், பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு என்று திரும்பி பார்க்க வைக்கும் வகையில் எந்த அறிவிப்பும் இல்லாதது பாஜக-விற்கு தேர்தலில் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதால் பெரியளவு அறிவிப்புகள் இல்லை என்று ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

மேற்கு வங்கத்தில் எப்படி?

ஆனால், பாஜக-விற்கு வெற்றி வாய்ப்பு அதிகளவு உள்ள மேற்கு வங்கம் மாநிலத்திற்கும் தனித்துவமான திட்டங்கள் ஏதுமில்லை என்றே கூறப்படுகிறது. அந்த மாநிலத்தில் மொத்தம் 77 தொகுதிகள் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக உள்ளது. 292 தொகுதிகள் கொண்ட அந்த மாநிலத்தில் இந்த முறை ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரசிற்கும்,பாஜக-விற்கும் கடும் சவால் இருக்கும் என்றே கருதப்படுகிறது. ஆனால், அந்த மாநிலத்தில் மக்களின் வாக்குகளை கவரும் வகையிலும் எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை.

தென்மாநிலத்தில் பாஜக-விற்கு சவால் தரும் முக்கியமான மற்றொரு மாநிலம் கேரளா. திருவனந்தபுரம் மாநகராட்சியை முதன்முறையாக கைப்பற்றி பாஜக-விற்கு வரும் தேர்தலில் ஏறுமுகம் இருக்கும் என்றே கருதப்படுகிறது. ஆனால், கேரளாவிற்கு எந்த அறிவிப்பும் இல்லாதது அந்த மாநிலத்தில் பாஜக வெற்றி வாய்ப்பை கடுமையாக பாதிக்கும் என்றே கருதப்படுகிறது.

வடகிழக்கில் முக்கியமான மாநிலமாக இருக்கும் அசாம் மாநிலத்தில் பாஜக ஆட்சியே நடந்து வருகிறது. ஆனால், அந்த மாநிலத்தினருக்கும் பெரியளவு அறிவிப்புகள் வெளியாகவில்லை என்றே கூறப்படுகிறது. மேலும், சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள யூனியன் பிரதேசமாக பாண்டிச்சேரிக்கும் மிகப்பெரிய அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை.

தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் 4 மிக முக்கியமான மாநிலங்களுக்கும் பட்ஜெட்டில் எந்த  அறிவிப்பையும் வெளியிடாதது வரும் தேர்தலில் பாஜக-விற்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும் என்றே கருதப்படுகிறது.

Read Entire Article