Bharat Bandh: இன்று ஸ்டிரைக்.. நாடே ஸ்தம்பித்தது! தமிழ்நாட்டில் பஸ் ஓடுமா? வங்கி இயங்குமா?

5 months ago 4
ARTICLE AD

மத்திய தொழிற்சங்கங்களான ஏஐடியூசி, ஐஎன்டியூசி, சிஐடியூ உள்ளிட்ட 7 தொழிற்சங்கங்கள் மத்திய அரசை கண்டித்து ஜுலை 9ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்தம் நடக்கிறது.

இன்று ஸ்டிரைக்:

மத்திய தொழிற்சங்கங்களின் இந்த வேலைநிறுத்தத்திற்கு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளின் தொழிற்சங்க அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால், நாடு முழுவதும் இன்று இந்த வேலைநிறுத்தத்தால் ஸ்தம்பித்து உள்ளது.

முடங்கிய வங்கி, தபால் சேவை:

இந்த வேலை நிறுத்தத்தால் வங்கி சேவைகள், தபால்துறை சேவைகள், தொழில்துறை சேவைகள், பொதுத்துறை சேவைகள் உள்ளிட்ட பல துறைகள் இன்று முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேற்கண்ட துறையின் பெருவாரியான தொழிலாளர்களை கொண்ட தொழிற்சங்கத்தினர் இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பதால் இன்று இந்த சேவைகள் மிக கடுமையாக பாதிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளுங்கட்சியான திமுகவின் தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான சிஐடியு உள்ளிட்ட பெரிய கட்சிகளைச் சேர்ந்த 13 தொழிற்சங்கங்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால், இன்றைய வேலைநிறுத்தத்தில் அவர்களும் பங்கேற்க உள்ளனர். இதனால், தமிழ்நாட்டிலும் இந்த வேலைநிறுத்தத்தின் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் பேருந்துகள் ஓடுமா?

போக்குவரத்து துறையில் மிகப்பெரிய தொழிற்சங்கமான தொமுச-வும் இந்த போராட்டத்தில் பங்கேற்று இருப்பதால் தமிழ்நாட்டில் பேருந்துகள் சேவை மிக கடுமையாக பாதிக்கப்படும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தமிழ்நாட்டில் பேருந்துகள் வழக்கம்போல இயங்கும் என்றும், தொழிற்சங்கத்தினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டால் அதற்கான மாற்று ஏற்பாடுகள் முழு அளவில் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். ஆனாலும், மற்ற நாட்களை காட்டிலும் பேருந்துகள் குறைவான அளவே இயங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

எதற்காக ஸ்டிரைக்:

மேலும், மத்திய அரசின் பணியாளர்கள் இதில் பங்கேற்பதால் தமிழ்நாட்டில் இன்று மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் வங்கி, தபால்துறை, காப்பீடு உள்ளிட்ட பல சேவைகளை பொதுமக்கள் பெறுவதில் கடும் சிரமம் ஏற்படும் என்றே கருதப்படுகிறது.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேணடும், ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும், தொழிலாளர் விரோத நலச்சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்ற 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தை மத்திய தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ளனர்.

25 லட்சம் பணியாளர்கள் போராட்டம்:

இந்த போராட்டத்தில் நாடு முழுவதும் உள்ள சுமார் 25 லட்சம் பணியாளர்கள் பங்கெடுத்துள்ளனர். இதனால், ஒட்டுமொத்த நாடும் ஸ்தம்பிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் இந்த வேலைநிறுத்தம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் கடைகள் ஆகியவை திறந்தே உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதிலும் எந்தவித சிரமமும் இல்லை.

Read Entire Article