Art and Culture 2025: மிஸ் பண்ணிடாதீங்க... நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

9 months ago 6
ARTICLE AD

Kalai Thiruvizha 2025: தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பில் சென்னையில் பொங்கல் விழாவின்போது, தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கலைகள், அயல் மாநில நாட்டுப்புறக் கலைகள், செவ்வியல் கலைகள் இடம் பெறும் வகையில் சென்னை நம்ம ஊரு திருவிழா சென்னையில் 18 இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கோயம்புத்தூர், தஞ்சாவூர், வேலூர், சேலம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய 8 இடங்களில் நம்ம ஊரு திருவிழா நடத்தப்பட்டது.

இவ்வாண்டும் மேற்காண் 8 இடங்களிலும் இக்கலை திருவிழா நடத்தப்பட உள்ளது. இவ்விழாவில் நிகழ்ச்சி நடத்த விரும்பும் கலைக்குழுக்களுக்களின் நிகழ்ச்சி பதிவு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மார்ச் 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது.

நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம்,காளை ஆட்டம், மயிலாட்டம்,பறையாட்டம், பம்பை, கைச்சிலம்பாட்டம், இறை நடனம், துடும்பாட்டம், ஜிக்காட்<wbr />டம், கிராமிய பாட்டு மற்றும் பல்சுவை நிகழ்ச்சி வழங்கும் கலைக்குழுக்கள் மார்ச் 22 சனிக்கிழமை அன்றும்,

தெருக்கூத்து, இசை நாடகம், நாடகம், கனியான் கூத்து, பொம்மலாட்டம். தோல்பாவைக் கூத்து, வில்லுப்பாட்டு, தேவராட்டம்,ஒயிலாட்டம்,சிலம்பா<wbr />ட்டம், மல்லர் கம்பம்,கும்மி,கோலாட்டம், மரக்கால் ஆட்டம், பரதநாட்டியம் பழங்குடியினர் நடனம் நிகழ்ச்சி நடத்துவோர் மற்றும் இதர கலைக்குழுக்களின் நிகழ்ச்சிகள் மார்ச் 23 ஞாயிறு அன்றும் மாவட்ட அரசு இசைப்பள்ளி, விழுப்புரம் என்ற இடத்தில் பதிவுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மாவட்ட அளவிலானத் தேர்வில் பங்கு பெற விரும்பும் கலைக் குழுக்கள், கலை பண்பாட்டு துறையின் இணையதளத்தில், (www.artandculture.tn.gov.in)வெளியிடப்பட்டுள்ள கூகுள் பார்ம் (Google Form) மூலம் மார்ச் 20 ஆம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் அல்லது விழுப்புரம் மாவட்டத்திற்கான பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் 8248650837 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பதிவு செய்துக்கொள்ளலாம்.

கலைஞர்களின் கோரிக்கையின் அடிப்படையில் 38 மாவட்டங்களிலும் கலைக்குழுக்களின் நிகழ்ச்சி பதிவு செய்யப்பட உள்ளது. இப்பதிவுக்கு வரும் கலைஞர்களுக்கு மதிப்பூதியம், போக்குவரத்து செலவினங்கள் வழங்கப்படாது. ஒவ்வொரு கலைக்குழுவின் 5 நிமிட வீடியோ பதிவு செய்யப்பட்டு கலை பண்பாட்டுத் துறையால் அமைக்கப்படும் தேர்வுக் குழுவால் தமிழ்நாட்டில் 8 இடங்களில் நடைபெற உள்ள சங்கமம் திருவிழாவில் நிகழ்ச்சி வழங்குவற்கான கலைக்குழுக்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இவ்விழாக்களில் சிறப்பான நிகழ்ச்சி வழங்கிய கலைக்குழுவினர் மாநில அளவிலான தேர்வுக்குழுவால் தெரிவு செய்யப்பட்டு 2026-ஆம் ஆண்டு சென்னை சங்மம் விழாவில் வாய்ப்பு பெறுவார்கள்.கலை பண்பாட்டுத் துறை அளித்துள்ள இந்த வாய்ப்பினை அனைத்து நிகழ்த்துக் கலைஞர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

Read Entire Article