ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏஆர் ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?

2 months ago 5
ARTICLE AD

பிரபல இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான்,  இவரது மகன் ஏஆர் ஆர் அமீன், இவரும் பல படங்களுக்கு பாடல்களை பாடியுள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு சென்னை கிண்டி ஒலிம்பியா டெக் பார்க் அருகே நண்பருடன் போர்ஷே காரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மகன் அமீனின் சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த ர கார் மீது மோதியுள்ளது.  இதில் அமீன் மற்றும் அவரது நண்பருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் மகன் அமீன் இன்று அதிகாலை 3:30 மணியளவில் தனது விலை உயர்ந்த காரில் நண்பரோடு கிண்டி நோக்கி சென்ற போது விபத்து கிண்டி ஒலிம்பியா டெக் பார்க் சிக்னல் அருகே சென்று கொண்டிருந்தபோது பக்கவாட்டு சாலையில் வந்த ரேபிடோ வேகன்-ஆர் வாகனம் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

ஏ.ஆர் ரகுமான் மகன் ஒட்டி வந்த விலை உயர்ந்த காருக்கும் (போர்ஷ்), ராபிடோ வேகன்-ஆர் காரும் மோதியலில் விபத்து நடைபெற்றுள்ளது. இந்த விபத்தில் ஏ.ஆர் ரகுமான் மகன் அமீன் மற்றும் அவரது நண்பர் ஆகியோருக்கு சிறு காயம் ஏற்பட்டதில் அவர்கள் காவேரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டு வீடு திரும்பினார்.

ராபிடோ வாகனத்தில் வந்த பயணிக்கு காயம் ஏற்பட்டதில் அவர்கள் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு பின் வீடு திரும்பினர். இரு தரப்பிலும் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது.

Read Entire Article