Andrea Jeremiah: தன்னை விட 5 வயது சிறியவரான அனிருத்துடன் காதல்; ஏமாற்றிய காதலன் - ஆண்ட்ரியாவின் சர்ச்சை நிறைந்த வாழ்க்கை!

11 months ago 7
ARTICLE AD

இதுவரையில் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகளின் பட்டியலில் ஒருவராக இருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. நடிகர் சிவா உடன் இணைந்து காஃபி விளம்பரத்தில் நடித்தவர் ஆண்ட்ரியா. அதன் பிறகு பொதிகை சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். அப்படித்தான் கௌதம் மேனன் இயக்கத்தில் வந்த வேட்டையாடு விளையாடு படத்தில் இடம் பெற்ற 'கற்க கற்க' என்ற பாடலை பாடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

பாடகியானதை தொடர்ந்து அடுத்தகட்டத்துக்கு நகர்ந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். கவர்ச்சிக்கு பெயர் போன ஆண்ட்யா அண்மைய காலமாக, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த  கதையை டார்கெட் செய்து நடிக்க துவங்கியுள்ளார். அந்த வகையில் இவரின் கைவசம் பிசாசு 2 திரைப்படம் உள்ளது.

அதே போல் இவர் இதற்கு முன்பு நடித்த, ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, தரமணி, விஸ்வரூபம், துப்பறிவாளன், விஸ்வரூபம் 2, வட சென்னை, அரண்மனை, அரண்மனை 3 உள்ளிட்ட பல படங்களிலும் இவரின் கதாபாத்திரங்கள் ஹீரோக்களுக்கு இணையாக தனித்து தெரிந்தது. பிசாசு 2 படத்தை தவிர
மனுஷி, நோ எண்ட்ரி, மாஸ்க் மற்றும் டைட்டில் வைக்கப்படாத படங்களில் நடித்து வருகிறார். இப்படி சினிமாவில் பிஸியான நடிகையாக ஆண்ட்ரியா வலம் வந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கை இவருக்கு சோகங்களும் கண்ணீரும் நிறைந்தவை.

இதில், பல காதல் தோல்விகளும் உண்டு. இசையமைப்பாளர் அனிருத் மற்றும் ஆண்ட்ரியா இருவரும் வயது வித்தியாசம் பார்க்காமல் காதலித்து வந்ததாகவும், இருவரும் ஒருவருக்கொருவர் முத்தமிடும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து ஆண்ட்ரியா எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. அதோடு அது உண்மையான உறவின் வெளிப்பாடு தான் என்று அப்போது அந்த புகைப்படம் குறித்து பேட்டி கொடுத்திருந்தார்.

அதன் பிறகு ஆண்ட்ரியா மற்றும் ஃபகத் பாசில் இடையில் காதல் மலர்ந்தது. ஆனால், இந்த காதல் நீண்ட காலம் நீடிக்கவில்லை. அவர்களது காதல் முறிவுக்கான காரணமும் வெளியாகவில்லை. இந்தப் பட்டியலில் அடுத்து இருப்பது உதயநிதி ஸ்டாலின் தான். ஆனால், ஆண்ட்ரியா உதயநிதி ஸ்டாலின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக அவரைப் பற்றிய கருத்துக்களை குறி வந்தார் என கூறப்பட்டது. ஒரு மேடை நிகழ்ச்சியில் என்னையும் ஒருவர் காதலித்து ஏமாற்றிவிட்டார் என்று வெளிப்படையாக கூறியிருந்தார்.

ஆனால், அது குறித்து மேலும் தெரிவிக்கவில்லை. ஆண்ட்ரியா காதலித்து கர்ப்பம் அடைந்ததாகவும், அவரது காதலன் பேச்சைக் கேட்டு கருவை கலைத்ததாகவும் அவரே கூறியிருக்கிறார். மேலும், இதனால், மன உளைச்சல் ஏற்பட்டதால் சினிமாவிலிருந்து விலகியிருந்ததாகவும் யோகா கிளாசில் இணைந்து அதன் மூலமாக கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்ததாக ஆண்ட்ரியா கூறியிருக்கிறார். அதோடு முக்கியமான விஷயமாக தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய அந்த காதலன் குறித்து புத்தகத்தில் எழுதியிருப்பதாகவும், அந்த புத்தகத்தை வெளியிட இருப்பதாகவும் ஆண்ட்ரியா கூறியிருக்கிறார். ஆனால், அந்த புத்தகத்தை வெளியிட்டால் அவரை காதலித்து ஏமாற்றிய அந்த காதலன் குறித்து தெரிந்துவிடும் என்பதால், காதலனைச் சார்ந்தவர்களால் ஏற்பட்ட பிரச்சனையால் ஆண்ட்ரியா அந்த புத்தகத்தை வெளியிடவில்லை என கூறப்பட்டது.

இப்படியெல்லாம் பல காதல் சர்ச்சைகளை சந்தித்துள்ள ஆண்ட்ரியா, 40 வயதை எட்ட போகும் நிலையில் முரட்டு சிங்கிளாகவே இருக்கிறார். அதோடு சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். வரும் 2025 ஆம் ஆண்டு ஆண்ட்ரியாவிற்கான ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் அவ்வளவு படங்கள் இவரின் கைவசம்.

Read Entire Article