Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு

2 months ago 7
ARTICLE AD

முதலமைச்சர் விஜய் தேர்தலில் வென்றதால் தன்னுடைய இளைய மகள் அனந்திகா கதறி அழுத சம்பவத்தை நடிகை குஷ்பு நேர்காணல் ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.

தென்னிந்திய சினிமா மட்டுமல்லாமல் தேசிய அளவிலான அரசியலிலும் மிக பிரபலமானவர் குஷ்பு. பாஜகவில் இயங்கி வரும் அவர் நேர்காணல் ஒன்றில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாருடன் பங்கேற்றார். அப்போது, “குஷ்புவுக்கு தமிழே தெரியாமல் இருந்தது. அப்போதெல்லாம் நாங்கள் செய்யாத கிண்டலே கிடையாது. இப்போது மைக் பிடித்து எந்த அளவுக்கு தமிழ் பேசுகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். அதனைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கும்” என சுஜாதா விஜயகுமார் தெரிவித்தார்.

தமிழால் தடுமாறிய காதல்

தொடர்ந்து பேசிய குஷ்பு, எந்த அளவுக்கு எனக்கு தமிழ் தெரியாது என்பதற்கு ஒரு சம்பவம் உள்ளது. அவந்திகா குழந்தையாக இருந்தபோது அவளை தூங்க வைத்து விட்டு மேலே போர்த்தியிருந்த போர்வையை சரியாக சொருகி விடுங்க என சொல்வதற்கு பதில் சொரிஞ்சு விடுங்க என்று சொல்லி விட்டேன். அவரும் பாப்பாவை சொரிந்து விட்டுக் கொண்டிருந்தார். நான் போர்வையை சொருகி விட்டு இதுகூட தெரியாதா என கூறினேன்.

சமையலறையில் எலி வந்ததை ஏலி வந்தது என சொல்வேன். நான் ஒருமுறை சுந்தருக்கு கடிதம் எழுதினேன். எனக்கு முழுதாக தமிழ் எழுத தெரியாது. அதனால் ஆங்கிலத்தில் எழுதி விட்டு கடைசியில் உங்கள் அன்புடன் பொண்டாட்டி என எழுதியும் அனுப்பி விட்டேன். பொள்ளாச்சியில் இருந்து அவர் எனக்கு போன் பண்ணி வடை பஜ்ஜி எப்போது வருகிறது என கேட்டார்.

நான் ஏன் சென்னையில இருந்து வரணும்? என கேட்க, நீதானே பொண்டாட்டியை போண்டா டீ என எழுதி அனுப்பிருக்க என சொல்லவும் எனக்கு ஒருமாதிரியாகி ஆகி விட்டது என அந்த காமெடி நிகழ்வை பகிர்ந்துள்ளார். இதனையடுத்து குஷ்புவிடம் சில புகைப்படங்கள் காட்டிய நிலையில் அதன் தருணங்களைப் பகிர்ந்து கொண்டார்.

விஜயை நினைத்து அழுத மகள்

அப்படியாக விஜயின் புகைப்படம் பற்றி காட்டியதும், குஷ்பு சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றை பகிர்ந்து கொண்டார். இளைய மகள் அனந்திதா தீவிர விஜய் ரசிகை. சட்டமன்ற தேர்தலில் சுந்தரும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதனைத் தொடர்ந்து வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு அனந்திகா அப்பாவை கட்டிப்பிடித்து கதறி அழுதாள். அப்பா தோற்றதை நினைத்து மகள் அழுகிறாள் போல என சுந்தரும் சமாதானப்படுத்தி பார்த்தார். ஆனால் தான் அதற்காக அழவில்லை. விஜய் தேர்தலில் ஜெயித்து விட்டார். இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டாரே என அழுததாக தெரிவித்தபோது எங்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை என குஷ்பு அந்த நிகழ்வை விவரித்திருந்தார்.

Read Entire Article