வடசென்னை படத்திற்கு தனுஷ் சிறந்த நடிகருக்கான விருது வென்றதுடன் தனுஷ் நடித்த படங்கள் மொத்தமாக சேர்த்து 9 விருதுகளை வென்றுள்ளன.

2016-2022 ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 2014 ஆம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான சின்னத்திரை விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் விழா பிப்ரவரி 13ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்க இருக்கிறார்

மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகிய திரைப்படங்கள் சிறந்த படங்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. விஜய் சேதுபதி , கார்த்தி , ஆர்யா , விக்ரம் பிரபு, தனுஷ் , சூர்யா , ஆகியோ சிறந்த நடிகர்களுக்கான விருதுகளை வென்றுள்ளார்கள்.

9 விருதுகளை குவித்த தனுஷ் படங்கள்

தனுஷ் நடித்த அசுரன் மற்றும் கர்ணன் ஆகிய இரு படங்களே இந்த 9 விருதுகளை வென்றுள்ளன. இந்த இரு படங்களை தயாரித்த கலைப்புலி தானு இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டிற்கான மாநில திரைப்பட விருதுகளில் ‘அசுரன்’ திரைப்படம் பின்வரும் விருதுகளை வென்றுள்ளது. சிறந்த முதலாவது படம் அசுரன் சிறந்த வசனம் – வெற்றிமாறன் சிறந்த நடிகை – மஞ்சு வாரியர் சிறந்த துணை நடிகர் – பிரகாஷ் ராஜ் சிறந்த கதை – பூமணி சிறந்த பின்னணி பாடகி – சைந்தவி அதேபோல், 2021 ஆம் ஆண்டிற்கான மாநில திரைப்பட விருதுகளில் ‘கர்ணன்’ திரைப்படம் பின்வரும் விருதுகளை வென்றுள்ளது: சிறந்த மூன்றாவது படம் கர்ணன் சிறந்த வசனம் – மாரி செல்வராஜ் சிறந்த கலை இயக்குநர் – டி. ராமலிங்கம் இந்த விருதுகளை வழங்கி கௌரவித்த தமிழ்நாடு அரசுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். தமிழ் சினிமாவை புதிய உயரத்திற்கு கொண்டு சென்ற இயக்குநர்கள் வெற்றிமாறன், மாரி செல்வராஜ் மற்றும் சிறப்பான நடிப்பால் இந்த படங்களுக்கு உயிரூட்டிய தனுஷ் ஆகியோருக்கு எங்கள் உளமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும். மேலும், விருதுகள் பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

2019 ஆம் ஆண்டிற்கான மாநில திரைப்பட விருதுகளில் ‘அசுரன்’ திரைப்படம் பின்வரும் விருதுகளை வென்றுள்ளது.
சிறந்த முதலாவது படம் அசுரன்
சிறந்த வசனம் – வெற்றிமாறன்
சிறந்த நடிகை – மஞ்சு வாரியர்
சிறந்த துணை நடிகர் – பிரகாஷ் ராஜ்
சிறந்த கதை – பூமணி
சிறந்த பின்னணி பாடகி – சைந்தவி

அதேபோல்,… pic.twitter.com/WPGmjylz7N

— Kalaippuli S Thanu (@theVcreations) January 30, 2026