“821 அரசு பணியிடங்கள்... TNPSC தேர்வுக்கு இலவச பயிற்சி எங்கே தெரியுமா?”

2 months ago 8
ARTICLE AD

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம், போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்காக கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) தொகுதி 2 மற்றும் 2A முதல்நிலைத் தேர்வுக்கு தயாராகும் போட்டித்தேர்வர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் தொடங்க உள்ளன.

821 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ரேவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில், TNPSC, SSC, RRB உள்ளிட்ட பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த பயிற்சி வகுப்புகளில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு பயனடைந்து வருகின்றனர். தற்போது TNPSC Group-I, SSC-CGL மற்றும் RRB ALP ஆகிய தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் TNPSC தொகுதி 2 மற்றும் 2A முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிக்கை கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான முதல்நிலைத் தேர்வு வரும் நவம்பர் 1-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 9-ம் தேதி கடைசி நாளாகும். மொத்தம் 821 பணிக்காலியிடங்கள் இந்தத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

ஆக.27 முதல் இலவச பயிற்சி

தொகுதி 2 மற்றும் 2A தேர்வுக்கு தயாராகி வரும் போட்டித்தேர்வர்கள் பயன்பெறும் வகையில், தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வரும் ஆகஸ்ட் 27-ம் தேதி வியாழக்கிழமை முதல் தொடங்கப்பட உள்ளன.

இந்த பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வாரத்தின் 5 நாட்களும் நடைபெறும். காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை வகுப்புகள் நடத்தப்படும். தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், இளைஞர்கள் இந்த இலவச பயிற்சி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மாணவர்களுக்கு சிறந்த வாய்ப்பு

TNPSC தேர்வுகளுக்கு தனியார் பயிற்சி மையங்களில் அதிக கட்டணம் செலுத்தி பயிற்சி பெற முடியாத பொருளாதார நிலையில் உள்ள மாணவர்களுக்கு, அரசின் சார்பில் நடத்தப்படும் இந்த இலவச பயிற்சி வகுப்புகள் பயனுள்ளதாக அமையும்.

போட்டித்தேர்வுகளுக்கு தொடர்ந்து தயாராகி வரும் தேர்வர்கள், தேர்வுக்கான பாடத்திட்டம், கேள்வி வடிவம், பொதுஅறிவு, திறனறிவு உள்ளிட்ட பகுதிகளில் முறையான பயிற்சி பெறுவதற்கும், தேர்வை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கும் இந்த பயிற்சி வகுப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பயிற்சி வகுப்பில் பங்கேற்பது எப்படி?

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.

பயிற்சி வகுப்புகள் தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 04362-237037 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

TNPSC தொகுதி 2 மற்றும் 2A முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த போட்டித்தேர்வர்கள், விண்ணப்பிக்கும் நடைமுறையுடன் சேர்த்து இந்த கட்டணமில்லா பயிற்சி வாய்ப்பையும் பயன்படுத்தி தேர்வுக்கு திட்டமிட்டு தயாராகுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Read Entire Article