<p>ஹைதராபாத்தில் பெற்ற தாய் தனது 8 வயது மகளை நான்காவது மாடியிலிருந்து தள்ளி கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>ஹைதராபாத்தில் ஒரு 37 வயது பெண், தனது எட்டு வயது மகளை, குடும்ப உறுப்பினர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, இங்குள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது என்று போலீசார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். இந்த சம்பவம் திங்கள்கிழமை மதியம் நடந்தது, இதன் விளைவாக சிறுமி உயிரிழந்ததாக, மல்காஜ்கிரி காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p>
<p>முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் அந்தப் பெண், ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் குடும்ப உறுப்பினர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து "மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார்" என்று அதிகாரி கூறினார். அவர் திங்கள்கிழமை தனது மகளை கட்டிடத்தின் நான்காவது மாடிக்கு அழைத்துச் சென்று கீழே தள்ளினார். கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/auto/royal-enfield-bullet-350-monthly-emi-plan-battalion-black-down-payment-243385" width="631" height="381" scrolling="no"></iframe></p>