அரண்ட திமுகவுக்கு எல்லாமே பயம்! வேல் முதல் விஜய் வரை - அண்ணாமலை ஆவேசம்!

4 hours ago 2
ARTICLE AD

புதுச்சேரி : புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தீபத்தூண் விவகாரத்தில், மாநில அரசு இந்துக்களுக்கு எதிராகச் செயல்படுவதாகவும், பொதுமக்களிடையே பிரிவினையைத் தூண்டுவதாகவும் குற்றம்சாட்டி, பாஜக அண்ணாமலை தலைமையில் தீப போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரியில் அண்ணாமலை தலைமையில் தீப போராட்டம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தீபத்தூண் விவகாரத்தில், மாநில அரசு இந்துக்களுக்கு எதிராகச் செயல்படுவதாகவும், பொதுமக்களிடையே பிரிவினையைத் தூண்டுவதாகவும் குற்றம்சாட்டி, பாஜக தேசியக் குழு உறுப்பினர் அண்ணாமலை தலைமையில் புதுச்சேரியில் தீபப் போராட்டம் நடைபெற்றது. உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகச் செயல்படும் அரசு
இந்து முன்னணி சார்பாக திருமங்கலம் ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் திருமடம், ஸ்ரீலஸ்ரீ கணேச தேசிக சாமிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் அண்ணாமலை கலந்துகொண்டார். இது குறித்து தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்ட அண்ணாமலை, "திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அமைந்துள்ள பகுதி, படிக்கட்டு மற்றும் நெல்லித்தோப்பு தவிர, மலை முழுவதும் முருகனுக்கும், கோவிலுக்கும் சொந்தம்" என்று 1920 ஆம் ஆண்டிலேயே ஆங்கிலேயர் காலத்தில் தீர்ப்பளிக்கப்பட்டு அது வெவ்வேறு காலகட்டங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தீபத்தூண் அமைந்துள்ள பகுதியும் கோவிலுக்குச் சொந்தமானது. மதுரை உயர்நீதிமன்ற அமர்வு டிசம்பர் 1, 2025 அன்று தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தர்கா தரப்பினர் யாரும் மேல்முறையீடு செய்யவில்லை. அறநிலையத்துறை: ஆனால், ஆலய வழிபாடுகளை உறுதி செய்ய வேண்டிய தமிழக இந்து சமய அறநிலையத்துறை, உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார். நீதிபதி பதவி நீக்க முயற்சி: மேலும், தீர்ப்பளித்த நீதியரசர் G.R.சுவாமிநாதன் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று புதுச்சேரி எம்.பி. வைத்தியலிங்கம் உட்பட 100 திமுக கூட்டணிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு கொடுத்திருப்பதாகவும், இவர்களின் உண்மையான நோக்கம் இந்து மத எதிர்ப்பு மட்டுமே என்றும் அண்ணாமலை கடுமையாகக் குற்றம் சாட்டினார்.

"திமுக ஆட்சியில் இந்துக்கள் ஒடுக்கப்படுகிறார்கள்"

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, "முருகனுக்கு இரண்டு மனைவி இருப்பதால் இரண்டு இடத்தில் தீபம் ஏற்ற முடியுமா என வாதாடிய வழக்கறிஞர் ஜோதி மன்னிப்பு கேட்க வேண்டும். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசு வக்பு வாரியம் மூலம் தர்காவைத் தூண்டி விடுகிறது" என்றார்.

மேலும், "திமுக ஆட்சியில் விநாயகர் ஊர்வலம், இந்து சமய வழிபாடுகள், ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். இந்த நிலை மாற, திமுக கூட்டணிக் கட்சிகள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

தவறை தவறு என்றும் வெளிப்படையாக சொல்லுங்கள் விஜய்

கம்முனு இருக்க வேண்டிய இடத்தில் கம்முனு இருக்கணும். கும்முனு இருக்க வேண்டிய இடத்தில் கும்முனு இருக்கணும். இதை சொன்னது விஜய் தானே. அரசியலில் அப்படி இருக்க முடியுமா. விஜய் கம்முனு இருப்பாரோ, கும்முனு இருப்பாரோ பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டும்.

அதை விஜய்யிடம் சொன்னாலே அவர் நல்ல அரசியல்வாதியாக வருவார். இவ்வளவு பிரச்சனைகள் நடக்கின்றன. எது நடந்தாலும் நான் வேடிக்கை மட்டும் பார்ப்பேன் என்றால், உங்களை நம்பி மக்கள் எப்படி ஆட்சி பொறுப்பை வழங்குவார்கள். சரியை சரி என்றும், தவறை தவறு என்றும் வெளிப்படையாக சொல்லுங்கள் விஜய். இதே விஜய் புதுச்சேரிக்கு வந்தார். பாஜக கூட்டணி ஆட்சியில் ஒரு எம்எல்ஏ மந்திரி ஆகிவிட்டார். சிறுபான்மையினர் என்பதால் பொறுப்பு வழங்கப்படவில்லை என்று விஜய் பேசினார் தானே.

பாஜகவுக்கு ஸ்டாலின் பாடம் எடுக்க வேண்டாம்

அன்றைக்கு சிறுபான்மையினர் என்று பேசிய விஜய், திருப்பரங்குன்றத்தில் பெரும்பான்மை மக்களுக்காக ஏன் பேசவில்லை. புதுச்சேரி மக்கள் விஜய்யை பார்த்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உண்மை தெரியும். தேர்தல் களத்தில் மோதுவோம். நியாயமான விஷயங்களுக்கு ஒன்றாக இருப்போம் என்று விஜய்யிடம் கூறிக் கொள்கிறேன்.  இந்திய அரசியலில் திமுகவை போல மோசமான தோல்வியை சந்தித்த கட்சி வேறு இல்லை. வரலாறு கிடையாத தோல்விகளை சந்தித்துள்ளனர். எத்தனையோ தேர்தல்களில் பூஜ்ஜியம் எடுத்துள்ளனர். தேர்தல் குறித்து பாஜகவுக்கு ஸ்டாலின் பாடம் எடுக்க வேண்டாம். அமித்ஷா மக்களிடம் நியாயத்தை பேசுவார்.

விஜயை பார்த்தால் திமுகக்கு பயம்

திமுகவினருக்கு வேல்-ஐ பார்த்தால் பயம். சிவனை பார்த்தால் பயம். பாஜ, இந்து முன்னணியை பார்த்தால் பயம்.யாரை பார்த்தாலும் பயம். பொட்டு வைத்தாலும் குஙகுமத்தை பார்த்தாலும் பயம். அரண்டவனுக்கு இருண்டது எல்லாம் பயம். குன்றை பார்த்தால் பயம் . விஜயை பார்த்தால் அவர்களுக்கு பயம். அதனால் அரண்டு போய் கிடக்கிறார்கள். இருண்ட உலகத்தில் வாழ்கிறார்கள். அனைத்தையும் பார்த்தும் பயப்படுகிறார்கள். ஏதோ சில தேர்தல்களில் வெற்றி பெற்றுவிட்டோம் என்பதற்காக ஸ்டாலின் மரத்தின் மீது இருந்து கூவ வேண்டாம். 2026 தேர்தலில் மக்கள் உங்களை ஆட்சியில் இருந்து இறக்கிவிட தான் போகிறார்கள். இதை ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Read Entire Article