<h2>கோர்ட் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த்</h2>
<p>டாப்ஸ்டார் பிரசாந்த் நல்ல கதைகளை தேர்வு செய்து மறுபடியும் தமிழ் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுக்க முயன்று வருகிறார். அந்த வகையில் பிரசாந்த் நடித்த அந்தகன் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. விஜயின் தி கோட் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் கவனமீர்த்த கோர்ட் படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசனின் மகன் கார்த்தி இந்த படத்தில் நாயகனாக நடிக்க நடிகை தேவயானியின் மகள் இனியா இந்த படத்தில் நாயகியாக நடிக்க இருக்கிறார்.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/#google_vignette" width="631" height="381" scrolling="no"></iframe></p>