Rohit Virat: அண்ணன் வர்றார் வழிவிடு.. விஜய் ஹசாரே தொடரில் ரோகித் - கோலி!

2 hours ago 1
ARTICLE AD

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவான் வீரருமான விராட் கோலி டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி வரும் விராட் கோலி 2027 உலகக்கோப்பையை ஆடும் இலக்கில் ஆடி வருகிறார்.

விராட் கோலி இஸ் பேக்:

கம்பீர் பயிற்சியாளர் பொறுப்பேற்ற பிறகு  விராட் கோலிக்கும், ரோகித் சர்மாவிற்கும் ஒருநாள் போட்டிகளில் இருந்து விலக அழுத்தம் தருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது. தேர்வுக்குழு தலைவர் அகர்கர் அளிக்கும் பேட்டிகளும் அதற்கேற்பவே உள்ளது.

பிசிசிஐக்கு பதிலடி தரும் வகையிலே ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் ரோகித் சர்மாவும், தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் விராட் கோலியும் அபாரமாக ஆடி அசத்தினர். இந்த நிலையில், நியூசிலாந்து தொடருக்கு முன்பு இவர்கள் இருவரும் விஜய் ஹசாரே போட்டியில் ஆட பிசிசிஐ அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

விஜய் ஹசாரே:

இதன்படி, டெல்லி அணிக்காக விராட் கோலியும், மும்பை அணிக்காக ரோகித் சர்மாவும் ஆடுகின்றனர். டெல்லி அணி இன்று தனது அணியை அறிவித்தது. இதில் விராட் கோலியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. கேப்டனாக ரிஷப்பண்ட் வழி நடத்துகிறார்.

டெல்லி அணி விவரம்:

ரிஷப்பண்ட், ஆயுஷ் பதோனி ( துணை கேப்டன்), விராட் கோலி,  அர்பிட் ராணா, யஷ் துள், சர்தக் ரஞ்சன், ப்ரியன்ஷ் ஆர்யா, தேஜஸ்வி சிங், நிதிஷ் ராணா, ஹ்ரித்திக் ஷோகின், ஹர்ஷ் தியாகி, சிமர்ஜித் சிங், ப்ரின்ஸ் யாதவ், திவ்ஜி மெஹ்ரா, ஆயுஷ் தோசேஜா, வைபவ் கண்ட்பால், ரோகன் ராணா, இஷாந்த் சர்மா, நவ்தீப் சைனி, அனுஜ் ராவத்.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2 சதங்கள், 1 அரைசதத்துடன் தொடர்நாயகன் விருதைத் தட்டிச்சென்ற விராட் கோலி விஜய் ஹசாரே தொடரிலும் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் அவர் 2 போட்டிகளில் மட்டும் ஆட உள்ளார். அதன்பின்பு, நியூசிலாந்து தொடருக்கு விராட் கோலி தயாராக உள்ளார்.

ரோகித்தும் ரெடி:

அதேபோல, மும்பை அணிக்காக விஜய் ஹசாரே தொடரில் ஆடும் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 2 போட்டிகளில் ஆடுவதை உறுதி செய்துள்ளார். மும்பை அணியை விஜய் ஹசாரே தொடரில் ஷர்துல் தாக்கூர் வழிநடத்துகிறார்.

ஷர்துல் தாக்கூர் ( கேப்ட்ன்) ரோகித் சர்மா, இஷான் முல்சந்தனி, முஷிர்கான், ரகுவன்ஷி, சர்ப்ராஸ் கான், சித்தேஷ் லாட், சின்மயி சுதர், ஆகாஷ் ஆனந்த், ஹர்திக் தாமோர், ஷாம்ஸ் முலானி, தனுஷ் கோடியன், துஷார் தேஷ்பாண்டே, ஓன்கர் டர்மலே,  சில்வெஸ்டர் டிசோசா, சாய்ராஜ் பட்டீல், சூர்யன்ஷ் ஷெட்கே.

2027 உலகக்கோப்பை:

வயதை காரணம் காட்டி ரோகித் மற்றும் விராட் கோலியை ஓரங்கட்ட அணி நிர்வாகம் காய் நகர்த்தி வரும் நிலையில், கடந்த சில வருடங்களாக இந்திய அணியின் ஒருநாள் போட்டிகளில் இவர்கள் 2 பேரின் பங்களிப்பாலே அதிக வெற்றிகளை இந்திய அணி பெற்றுள்ளது. இதனால், அவர்கள் 2027 உலகக்கோப்பையில் ஆட வேண்டும் என்பதே ரசிகர்களின் வேண்டுகோளாகவும் உள்ளது.

Read Entire Article