ஹரித்ரா கணபதி, ஏகதந்தி, துவிமுக கணபதி

3 months ago 6
ARTICLE AD

ஹரித்ரா கணபதி,  ஏகதந்தி, துவிமுக கணபதி - வரம் தா விநாயகா..!

21. ஹரித்ரா கணபதி :

மங்களகரமாக மஞ்சள் வண்ணத்தில் காட்சியளிக்கும் ஹரித்ரா கணபதி, அங்குசம், பாசம், தந்தம், மோதகம் ஆகியவற்றை தன்னுடைய நான்கு திருக்கரங்களில் ஏந்தியவராக அருள்பாலிக்கிறார்...

22. ஏகதந்தி கணபதி:

நீல நிற திருமேனியை உடைய ஏகாந்த கணபதி கையில் கோடரி, தந்தம், அட்சமாலை, லட்டு ஆகியவற்றை ஏந்தியவராக நமக்கு காட்சியளிக்கிறார்...

23. சிருஷ்டி கணபதி:

செந்நிற திருமேனியையுடைய சிருஷ்டி கண்பதி தன் நான்கு திருக்கரங்களில் அங்குசம், பாசம், தந்தம், மாம்பழம் இவற்றைத் ஏந்தியவராக... பெருச்சாளி வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்....

24. உத்தண்ட கணபதி :

பாசம், நீல புஷ்பம், தாமரை, தந்தம், கரும்பு வில், கதை, ரத்ன கலசம், நெற்கதிர், மாதுளம் பழம், மாலை ஆகியவைகளை தனது பத்து திருக்கரங்களில் வைத்திருப்பவராக அருள்பாலிக்கும் உத்தண்ட கணபதி.  இடது தொடையில், பச்சை நிற மேனி தேவியை ஏற்றிருப்பவராக நமக்கு காட்சி அளிக்கிறார்...

25. ரணமோசன கணபதி :

செந்நிறப் பட்டாடை உடுத்திய நம் ரணமோசன கணபதி வெண்பளிங்கு திருமேனியுடையவர்.  தன் திருக்கரங்களில், அங்குசம், பாசம், தந்தம், நாவற்பழம் இவற்றைத் தாங்கியவராக நமக்கு காட்சி அளிக்கிறார்...

26. துண்டி கணபதி :

தன்னுடைய 4 கரங்களில் ரத்ன கலசம்,கோடரி அட்சமாலை இவைகளோடு ஒடிந்த தந்தத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். காசி க்ஷேத்திரத்தில் துண்டி கணபதி மிகவும் பிரசித்தி பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது...

27. துவிமுக கணபதி :

பசுமையான நீல நிறமுடையவர் துவிமுக கணபதி...  செம்பட்டாடை உடுத்தியவராக... தன்னுடைய 4 திருக்கரங்களில் பாசம், தந்தம், அங்குசம், ரத்ன பாத்திரத்தை ஏந்தியவராக நமக்கு காட்சியளிக்கிறார்...

28. மும்முக கணபதி :

பொற்றாமரை ஆசனத்தில்  அமர்ந்து 3 முகத்துடன் நமக்கு காட்சியளிக்கும்  மும்முக கணபதி . சிவந்த மேனியை உடையவர். தன்னுடைய கைகளில் அங்குசம், பாசம், அட்சமாலை, அமுத கலசம், அபய, ஹஸ்த முத்திரைகளைத் தாங்கியவராக நமக்கு அருள்பாலிக்கிறார்...

29. சிங்க கணபதி :

வெண்மை நிறத்தில் காட்சியளிக்கும் சிங்க கணபதி, தனது 6 திருகரங்களில், கற்பகக் கொடி, வீணை, சிங்கம், தாமரை, பூங்கொத்து, ரத்ன கலசத்தை தாங்கியவர், தனது இரண்டு திருக்கரங்களில் வரதம், அபயம் முத்திரைகளையும் ஏந்தியவராக நமக்கு அருள்பாலிக்கிறார். இவர் சிங்கத்தை வாகனமாக கொண்டவர்...

30. யோக கணபதி :

நீல நிற ஆடையை தரித்தவரான யோக கணபதி... சிவந்த நிறமுடையவர்...  கைகளில் பாசம், அட்சமாலை, யோகதண்டம், கரும்பு ஆகியவைகளைத் ஏந்தி, யோக நிலையில் நமக்கு அருள்பாலிக்கிறார்...

31. துர்க்கா கணபதி:

துர்கா கணபதி தன் எட்டு திருக்கரங்களில் பாசம், அங்குசம், பாணம், அட்சமாலை, தந்தம்,கொடி, வில், நாவற்பழம் ஆகியவற்றைத் தாங்கி பெரிய உருவத்துடன் காட்சியளிக்கும் இவர் பொன்னிறமுடையவர்...

32. சங்கட ஹர கணபதி:

தன்னுடைய இடது தொடையில் நீல நிற பூவை ஏந்திய தேவியோடு காட்சியளிக்கும் சங்கட ஹர கணபதி. நீல நிற ஆடை அணிந்தவறாக செந்தாமரை பீடத்தில் அமர்ந்து வரத முத்திரையுடன், பாசம், அங்குசம்,பாயசக் கிண்ணத்தினைத் தாங்கி பக்தர்களுக்கு  அருள்பாலிக்கிறார்...

Read Entire Article