TN government free laptop: இலவச லேப்டாப்பில் இவ்வளவு புதிய வசதிகளா.!! லிஸ்ட் போட்டு இபிஎஸ்யை விளாசிய உதயநிதி

2 hours ago 1
ARTICLE AD

கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பாக ஜனவரி மாதம் முதல் இலவச லேப்டாப் வழங்கப்படவுள்ளது. இந்த திட்டம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகளை எழுப்பி விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்லூரி மாணவர்களுக்கான மடிக்கணினி திட்டத்தை முடக்க நினைக்கும் எடப்பாடியின் கனவு பலிக்காது! தமிழ்நாட்டில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு இப்போது ஏன் லேப்டாப் கொடுக்கிறீர்கள் என்ற கேள்வியை திடீர் 'கணினி நிபுணர்' எடப்பாடி பழனிசாமி அவர்கள் எழுப்பி இருக்கிறார்.

இன்னும் சில வாரங்களில் நம் மாணவர்கள் கரங்களுக்கு மடிக்கணினிகள் சென்று சேரவுள்ள நிலையில், இந்தக் கேள்வியை எதிர்க்கட்சித்தலைவர் எழுப்பியுள்ள நோக்கம் என்ன என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், மாணவர்களுக்கும் நன்றாக தெரியும். தன்னுடைய குறுகிய அரசியல் லாபத்திற்காக, கல்லூரி மாணவர்கள் பயன்பெற இருக்கும் ஒரு திட்டத்துக்கு எதிராக அவதூறுகளை பரப்ப வேண்டும் என்பதே அவருடைய எண்ணம்.

தமிழ்நாட்டு மாணவர்கள் படித்து முன்னேறிவிடக் கூடாது என்ற பாசிச பாஜகவின் எண்ணத்தை, அவர்களின் வழிகாட்டுதலின்படி எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். ஏற்கனவே அறநிலையத்துறை நிதியில் கல்லூரி ஆரம்பிக்கலாமா என்று கேட்டு, தமிழ்நாட்டு மக்களிடமும் மாணவர்களிடமும் வாங்கிக்கட்டிக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, இப்போது, "கல்லூரி மாணவர்களுக்கு கல்வி ஆண்டின் நடுவில் ஏன் லேப்டாப் கொடுக்கிறீர்கள்," என்கிறார்.

கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் கிடைப்பதை வரவேற்கும் பரந்த மனப்பான்மை கூட இல்லாத எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இந்தத் திட்டத்தை எப்படியாவது சீர்குலைத்துவிட முடியாதா என்று முயற்சிக்கிறார். ஆனால், முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான நம்முடைய திராவிட மாடல் அரசு நிச்சயமாக கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கத் தான் போகிறது. இதை எடப்பாடி பழனிசாமி அல்ல, அவர்களது டெல்லி ஓனர்கள் நினைத்தாலும் தடுக்க முடியாது. லேப்டாப் ஏதோ தேர்தலுக்காக திடீரென கொடுக்கப்படுகிறது போன்ற ஒரு பொய் பிம்பத்தை ஏற்படுத்த எடப்பாடி பழனிச்சாமி முயல்கிறார். 2025-2026 நிதிநிலை கூட்டத்தொடரின் போதே இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. அதாவது, “20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்” என்று தெளிவாக நிதிநிலை அறிக்கையில் உள்ளது.

அந்த நிதிநிலை அறிக்கை அவருக்கும் வழங்கப்பட்டு இருந்தது. எதிர்க்கட்சித்தலைவர் அதை படித்துப் பார்த்தாரா, இல்லை, வழக்கம் போல வீட்டிலேயே வைத்துவிட்டாரா என்பது அவருக்கே வெளிச்சம்.நான் இதுவரை எடப்பாடி பழனிசாமியை சேக்கிழார் எழுதிய கம்ப இராமாயணத்தைப் படித்த தமிழ்ப் புலவர் என்று மட்டும்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். அவர் தமிழ்ப் புலவர் மட்டுமல்ல. அவர் சிறந்த Computer Expert என்பதும் இப்போது தான் தெரிந்தது. அரசின் லேப்டாப் மாணவர்களின் கரங்களுக்கு இனி தான் சென்ற சேர இருக்கிறது. அதற்குள்ளாக, நம்முடைய 'கணினி நிபுணர்' எடப்பாடி பழனிசாமி, லேப்டாப்பில் தொழில்நுட்பம் போதவில்லை - Configuration சரி இல்லை என்று கதைவிடுகிறார்.

கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் வகையில், செயற்கை நுண்ணறிவுக்கு (AI) ஏற்றவாறு, அதிவேக Processor மற்றும் நீண்டநேரம் தாங்கும் Battery என அத்தனை நவீன தொழில்நுட்பங்களுடன் இந்த லேப்டாப் இருக்கிறது. அமெரிக்காவின் Perplexity AI நிறுவனத்தோடு எல்காட் நிறுவனம் ஒரு சிறப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. அதன்படி 6 மாத காலத்திற்கு Preplexity Pro AI வசதி கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. நாம் வாங்க கூடிய லேப்டாப்புகளும் சாதாரண நிறுவனங்களிடமிருந்து வாங்கவில்லை. உலக அளவில் தரத்திற்கும் நம்பகத்தன்மைக்கும் பெயர் பெற்ற DELL, ACER, HP ஆகிய நிறுவனங்களிடம் இருந்தே, எந்தவித இடையீட்டு நிறுவனங்களும் இன்றி நேரடியாக கொள்முதல் செய்து மாணவர்களுக்கு வழங்குகிறோம்.

இப்படி தரம், தொழில்நுட்பம், வசதி என அனைத்திலும் சிறப்பாக இருக்கக்கூடிய மடிக்கணினிகளை கல்லூரி மாணவர்களுக்கு நம் அரசு வழங்க இருக்கிறது.
இவை படிப்படியாக மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு கல்லூரி மாணவர்கள் கிறிதுஸ்மஸ், புத்தாண்டு விடுமுறை முடிந்து கல்லூரிக்கு வந்தவுடன் அவர்களுக்கு வழங்கப்படும். வரும் பிப்ரவரி மாதத்திற்குள் 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்படும்.

அ.தி.மு.க. ஆட்சியில் தான் லேப்டாப் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டதாக எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். ஆனால், 2019-லேயே அந்த திட்டத்தை பாதியிலேயே கைவிட்டு, மாணவர்களை ஏமாற்றியவர் தான் எடப்பாடி பழனிச்சாமி என்பதை நாடறியும். அதற்கு 2021-லேயே தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டினார்கள். ஒன்றிய அரசின் பாரபட்சமான நிதி ஒதுக்கீடு. அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட நிதி சுரண்டல் இவற்றையெல்லாம் திறம்பட எதிர்கொண்டு. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை தமிழ்நாட்டில் நிறைவேற்றி வருகிறார்கள்.

ஏற்கனவே காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண். தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன், வெற்றி நிச்சயம். போன்ற திட்டங்களால் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று இந்தியாவே பாராட்டும் நிலையில், லேப்டாப் வழங்கும் திட்டம், தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லவுள்ளது. இவற்றையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாத எடப்பாடி பழனிச்சாமி ஏதேதோ கதைகளைச் சொல்கிறார். அவருடைய நோக்கம், எதையாவது சொல்லி இந்த திட்டத்தை தடுக்க முடியுமா என்பதுதான். அவருடைய எண்ணம் ஒரு போதும் பலிக்காது என உதயநிதி தெரிவித்துளார்.

Read Entire Article