ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் அனிருத் காவியா மாறன் திருமணம்..தேதி குறித்த ஜோதிடர்

2 weeks ago 3
ARTICLE AD

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. அந்த வகையில் வரும் நவம்பர் மாதம் அனிருத் காவ்யா மாறனுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்பெயின் நாட்டில் இருவரது திருமணம் நடைபெற இருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்திய சினிமாவில் நட்சத்திர இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் அனிருத். ரஜினி , கமல் , ஷாருக் கான் , விஜய் , அஜித் , ஜூனியர் என்.டி.ஆர் , அல்லு அர்ஜூன்  என இந்திய சினிமாவின் ஸ்டார் நடிகர்களின் படங்களுக்கு அடுத்தடுத்து இசையமைத்து வருகிறார். அனிருத் சராசரியாக ஒரு படத்திற்கு 10 முதல் 15 கோடி வரை சம்பளமாக பெற்று இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக உள்ளார்.  மறுபக்கம் 30 ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரரான கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளராக இருந்து வருகிறார். சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் வெளியான பேட்டை , தர்பார், ஜெயிலர் , கூலி , டிசி , ஜெயிலர் 2 என அடுத்தடுத்த படங்களுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். அனிருத் காவியா மாறன் இருவரும் காதலித்து வருவதாகவும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் கூடிய விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் அடிக்கடி தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் இதுகுறித்து இருதரப்பில் இருந்தும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை

ஸ்பெயினில் திருமணம்

அனிருத் காவ்யா மாறன் திருமணம் குறித்து இரு வீட்டார் தரப்பிலும் ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாகவும் ஆனால் அனிருத்தின் ஜாதகம் படி அவரது திருமண தேதிக்காக அவரது குடும்பத்தினர் இத்தனை நாள் காத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது. தற்போது வரும் நவம்பர் மாதம் அனிருத் காவ்யா மாறன் திருமணத்திற்கான தேதி குறிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்பெயினில் பிரம்மாண்டமாக இருவரது திருமணம் நடைபெற இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

திருமணம் குறித்த தகவல்கள் ஒருபக்கம் வெளியானாலும் அனிருத் மற்றும் காவ்யா மாறன் தங்களது திருமணம் குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அனிருத் பொறுத்தவரை திருமணத்திற்கு எந்த அவசரமும் இல்லாத ஒருவராகவே அவரது பதில்கள் அமைந்துள்ளன.

Read Entire Article