School Student: பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,25,000 வரை உதவித்தொகை: யாருக்கெல்லாம் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?

1 hour ago 1
ARTICLE AD

கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. இது மாணவர்களின் உயர்கல்விக்கு வழிவகுக்கிறது. இந்நிலையில் பள்ளி மாணவர்கள் உயர்கல்வி படிப்பதை ஊக்கப்படுத்தும் விதமாக பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் மத்திய அரசு கல்வித்தொகை தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. எப்படி விண்ணப்பிப்பது, அதற்கான தகுதிகள் என்னென்ன என்று விரிவாக பார்க்கலாம்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இதுதொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: மத்திய அரசால் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2026-27-ம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சிறந்த செயல்பாடு கல்வி நிறுவனம் பள்ளிகளில் நடப்பாண்டில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த தகுதியான மாணவ- மாணவிகள் கல்வி உதவித்தொகை திட்டத்தில் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (https://scholarships.gov.in) விண்ணப்பிக்கலாம்.

இதையும் படிங்க: Dearness Allowance: குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அகவிலைப்படி உயர்வு! எவ்வளவு தெரியுமா?

ரூ.75,000 முதல் ரூ.1,25,000 வரை உதவித்தொகை

இந்த திட்டத்தில் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணமாக ஆண்டுக்கு அதிகபட்சமாக 9, 10-ம் வகுப்பு படிப்பவருக்கு ரூ.75,000, மற்றும் 11, 12-ம் வகுப்பு படிப்பவருக்கு ரூ.1,25,000 வரை உதவித்தொகையாக மத்திய அரசால் வழங்கப்படும். 30 சதவீதம் மாணவிகளுக்கு இத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 30-ம் தேதி ஆகும். கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபார்க்க கடைசி நாள் டிசம்பர் 15ம் தேதியாகும்.

இதையும் படிங்க: Guru - Ketu Conjunction: தீபாவளி திருநாளில் குரு-கேது சேர்க்கை.. கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் எவை?

என்னென்ன தகுதிகள்?

மாணவ-மாணவிகள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் அல்லது சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். 2025-26-ம் கல்வியாண்டில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள பள்ளிகளில் பயில்பவராக இருத்தல் வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Read Entire Article