ஸ்தம்பித்த சீர்காழி மாட வீதிகள்: மாட வீதிகளில் உலா வந்த சகோபரம்! மெய்சிலிர்த்த பக்தர்கள்..!

1 month ago 7
ARTICLE AD

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள, தேவாரப் பாடல் பெற்ற உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரமபுரீஸ்வரர் திருக்கோயிலில், சித்திரை பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வான 'தெருவடைச்சான்' எனப்படும் சகோபுர உற்சவம் நேற்று இரவு மிக விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

சமயக் குரவர் அவதரித்த திருத்தலம்

சைவ சமயக் குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தருக்கு, அன்னை பராசக்தி நேரில் தோன்றி ஞானப்பால் வழங்கிய பெருமைக்குரிய தலம் சீர்காழி. இங்கு பிரமபுரீஸ்வரர், தோணியப்பர், சட்டைநாதர் என சுவாமி மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயிலின் சித்திரை பிரமோற்சவம் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தற்பொழுது கலைகட்டி வருகிறது.

ஐந்தாம் நாள் விழா: தெருவடைச்சான் உற்சவம்

15 நாட்கள் நடைபெறும் இந்த பிரம்மாண்ட உற்சவத்தின் ஐந்தாம் நாள் திருவிழா மிகவும் தனித்துவமானது. இது 'தெருவடைச்சான்' உற்சவம் அல்லது 'சகோபுரத் திருவிழா' என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தேரானது மற்ற தேர்களை விட அகலமான அமைப்பைக் கொண்டது. நான்கு மாட வீதிகளிலும் இந்தச் சகோபரம் வரும்போது, தெருவையே அடைத்துக்கொண்டு வருவதால் இதற்கு 'தெருவடைச்சான்' என்ற பெயர் காரணப் பெயராக அமைந்தது.

நேற்று இரவு நடைபெற்ற இந்த விழாவினை முன்னிட்டு, பிரமபுரீஸ்வரர் மற்றும் திருநிலைநாயகி அம்பாளுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், மின் விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட சகோபுரத்தில், சுவாமி மற்றும் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினர். இவர்களுடன் விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளும் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளித்தனர்.

பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்த பக்தர்கள்

சகோபுரத்தில் சுவாமி எழுந்தருளியதும், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் "தென்னாடுடைய சிவனே போற்றி", "நமச்சிவாய" போன்ற பக்தி முழக்கங்களை எழுப்பியபடி, நீண்ட வடத்தைப் பிடித்து சகோபுரத்தை இழுத்தனர்.

இந்தச் சகோபரம் கோயிலின் நான்கு மாட வீதிகளிலும் அசைந்தாடி வந்தது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. வீதிகளின் இருபுறங்களிலும் காத்திருந்த பக்தர்கள், தங்கள் வீடுகளின் முன்னே சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாட வீதிகளை வலம் வந்த சகோபரம், பின்னர் நிலையை அடைந்தது.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

விழாவினை முன்னிட்டுச் சீர்காழி நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு, வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகளைக் கோயில் நிர்வாகம் செய்திருந்தது. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க, மயிலாடுதுறை மாவட்டக் காவல்துறை சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

வரவிருக்கும் முக்கிய நிகழ்வுகள்

சித்திரை பிரமோற்சவத்தின் தொடர்ச்சியாக, வரும் நாட்களில் தேரோட்டம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. நேற்று நடைபெற்ற சகோபுர உற்சவத்தில் சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வருகை தந்து இறைவனின் அருளைப் பெற்றுச் சென்றனர்.

Read Entire Article