வேப்பங்குளத்தில் தென்னை விவசாயிகளுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு

2 hours ago 1
ARTICLE AD

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் வேப்பங்குளம், தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் பட்டியல் இன, தென்னை விவசாயிகளுக்கான ஒரு நாள் பயிற்சி, இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

புதுடெல்லி, இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம், அகில இந்திய ஒருங்கிணைந்த மலைப்பயிர்கள் ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ், தஞ்சாவூர் மாவட்டம், நம்பிவயல், நடுவிக்கோட்டை, உஞ்சியவிடுதி, கிராம பட்டியலின தென்னை விவசாயிகளுக்கு விவசாய இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, பட்டுக்கோட்டை அருகே உள்ள வேப்பங்குளம், தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது.

மேலும், தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றிய ஒரு நாள் நேரடி நிலையப் பயிற்சியும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வினை, கோயம்புத்தூர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், முதன்மையர் முனைவர் க.வெங்கடேசன், (தோட்டக்கலை), அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டம் (மலைப்பயிர்கள்) முதன்மை விஞ்ஞானி, திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். பி.அகஸ்டின் ஜெரால்டு ஆகியோர் தலைமை வகித்து துவக்கி வைத்தனர்.

இவ்விழாவில், வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையம் இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கை.குமணன் வரவேற்று பேசுகையில்,  தற்போது உள்ள தென்னை சாகுபடியின் முக்கியத்துவம் மற்றும் சமூக பொருளாதார நிலை முன்னேற்றங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

இணைப்பேராசிரியர் (பயிர் நோயியல்) முனைவர் ம.சுருளிராஜன், தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகள் பற்றியும், உதவிப்பேராசிரியர் (பூச்சியியல்) முனைவர் நா.முத்துக்குமரன் தொழில்நுட்ப உரையாற்றி, செயல் விளக்கங்களை செய்து காட்டினர்.

இணைப்பேராசிரியர் (உழவியல்) முனைவர் ந.செந்தில்குமார் ஒருங்கிணைந்த பயிர் பண்ணையம் மூலம் லாபகரமான தென்னை சாகுபடி பற்றி விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில், தென்னைக்கு பூச்சி மற்றும் நோய் தடுப்பு முறைகள் மற்றும் தென்னை டானிக் செலுத்துதல் பற்றிய செயல்விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது. தென்னை விவசாயிகளின் கேள்வி பதில், முன்னோடி விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளின் கருத்துக்கள் பரிமாற்றம் போன்றவை நடைபெற்றது.

நிகழ்ச்சியின், நிறைவாக பட்டியலின தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில், அவர்களுக்கு தேவையான பண்ணை இடுபொருட்களை இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் வழங்கினார். இணைப்பேராசிரியர் (பயிர் நோயியல்) முனைவர். ம.சுருளிராஜன், இளநிலை ஆராய்ச்சியாளர், அ. வள்ளிநாயகம், வேளாண் உதவி அலுவலர்கள் பி.விஜயலலிதா, பி.சுந்தரி ஆகியோர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.

பயிர்காப்பீடு செய்து பாதுகாப்பு பெறுங்கள்

தென்னை மரங்களுக்கு பயிர்க் காப்பீடு செய்து பாதுகாப்பு பெறுமாறு, பேராவூரணி தோட்டக்கலைத்துறை விவசாயிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து பேராவூரணி தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் வள்ளியம்மாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் வட்டாரங்களில் மிக முக்கிய பயிராக தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தோராயமாக 15 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி உள்ளது. இந்த தென்னை மரங்கள், தற்போது பல்வேறு வகையான இயற்கை சீற்றங்கள், பூச்சிநோய் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.

கஜா என்ற பேரழிவுக்குப் பிறகு பூச்சிநோய் தாக்கம் மிக அதிகமாக காணப்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு சரியான பராமரிப்பு முறைகளைக் கையாளுவதோடு, மரங்களுக்கு காப்பீடு செய்வதும் மிக முக்கியமாகும். தற்போது தென்னை காப்பீடு தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வந்துள்ளது. அதனடிப்படையில் 4 முதல் 15 வயதுடைய மரம் ஒன்றுக்கு ரூ.2.25,  16 முதல் 60 வயதுடைய மரம் ஒன்றுக்கு ரூ.3.50 ம் செலுத்த வேண்டும். அதேபோல் 2 வருடங்களுக்கு சேர்த்து கட்ட வேண்டுமானால் 4-5 வயது மரம் ஒன்றுக்கு 2-வருடத்திற்க்கு ரூ.4.16 ம், 3- வருடத்திற்கு ரூ.5.91 ம், 16-60 வயதுள்ள மரத்திற்கு 2 வருடங்களுக்கு 6.48 ம், 3- வருடத்திற்கு ரூ.9.19 ம் பிரிமியமாக கட்ட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, நாட்டாணிக்கோட்டை பகுதியில் உள்ள, பேராவூரணி, தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்து செய்து பயனடையலாம்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Read Entire Article