வேதனையான சாதனை; முதல்முறையாக தேர்தலில் தொடர்ந்து 2ஆம் முறை தோற்ற அதிமுக!

1 month ago 5
ARTICLE AD

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தொடர்ந்து இரண்டாம் முறையாகத் தோற்றதே இல்லை என்ற சாதனையைத் தமிழக மக்கள் இந்த முறை தகர்த்து எறிந்துள்ளனர்.

அதிமுக வசம் வைத்திருந்த சாதனைகள்

எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக 54 ஆண்டுகளாக பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரக் கட்சியாக இருந்தது.  30 ஆண்​டு​களுக்கு மேல் ஆட்சி​யில் இருந்த கட்சி, அடுத்​தடுத்த தேர்​தல்​களில் வென்ற ஒரே கட்​சி, எம்ஜிஆர் உயிரோடு இருக்​கும்​வரை தோல்வியையே பார்க்காத கட்சி, தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்ற கட்​சி என்ற சாதனை​களை அதி​முக தன்வசம் வைத்திருந்தது.

இந்த நிலையில், கடந்த கால வரலாற்றை வைத்துப் பார்க்கும்போது அதிமுக இந்த முறை நிச்சயம் ஆட்சிக்கு வரும் அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவித்து வந்தனர். எனினும் இந்த நம்பிக்கை பொய்த்துப் போயுள்ளது.

தொடர் தோல்வியைக் காணும் அதிமுக

கடந்த 2019ஆம் ஆண்டு மக்​கள​வைத் தேர்​தலில் தொடங்கிய தோல்வி, அதிமுகவுக்கு 2026 வரை தொடர்ந்து வரு​கிறது. 2019 படுதோல்விக்கு பாஜக கூட்டணியே காரணம் என்று, 2024 மக்​களவை தேர்​தலில் பாஜக​வுடன் கூட்​டணிவைக்​காமல் போட்​டி​யிட்​டார் எடப்பாடி பழனிசாமி. எனினும் ஓர் இடத்​தில்​கூட வெற்றி பெற​முடிய​வில்​லை. 2021 தேர்தல் தோல்விக்குப் பிறகு 2026 தேர்தலில் வெற்றி பெறலாம் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தார் ஈபிஎஸ். எனினும் அது நடக்கவில்லை.

தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

அதி​முக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணியில் அதி​முக 169 தொகு​தி​களில் போட்​டியிட்டது. பாஜகவுக்கு 27 தொகு​தி​கள் ஒதுக்கப்பட்டன.

அதேபோல பாமக​வுக்கு 18 தொகு​தி​கள், அமமுகவுக்கு 11 தொகு​தி​கள், தமிழ் மாநில காங்​கிரஸுக்கு 5 தொகுதிகள் ஒதுக்​கப்​பட்​டன. இதில் அதிமுக கூட்டணி 53 இடங்களை மட்டுமே கைப்பற்றி, மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது.

அதிமுக வென்ற 53 இடங்கள்

அதிமுக தனித்து 47 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், பாமக 4 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக மற்றும் அமமுக தலா 1 இடங்களை மட்டுமே வென்றுள்ளன.

இந்த நிலையில், தொடர்ந்து 2ஆம் முறையாகத் தோற்றபோது அதிமுகவின் தலைவராக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி என்ற பெயருக்கு ஆளாகி இருக்கிறார் ஈபிஎஸ். இந்தப் பெயர் அடுத்த முறையாக களைந்தெறியப்படுமா என்பதற்குக் காலம்தான் பதில் சொல்லும்.

Read Entire Article