நிலா முற்றத்தில் கவிமழை.... சிவகங்கையில் நூல் வெளியீடு: இலக்கியப் பெருவிழா!

1 hour ago 1
ARTICLE AD

சிவகங்கையில்  நிலா முற்றத்தில் கவிமழை எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

கவிதை நூல் வெளியீட்டு விழா.

சிவகங்கை தமிழவைய ஒருங்கிணைப்பில் புலவர் கா.காளிராசா எழுதிய நிலா முற்றத்தில் கவிமழை என்னும் கவிதை நூல் வெளியீட்டு விழா சிவகங்கை சிவன் கோவில் எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்நிகழ்வில் ஸ்ரீ சாய் கலாச்சேத்ரா நாட்டியப் பள்ளி மாணவர்கள் தமிழ் வணக்கப் பாடலை தந்தனர், செல்வன் பிரசாந்த் தமிழ் முழக்கப் பாடலை பாடினார்.

சிவகங்கை தமிழவையச் செயலர் சுரேஷ் வரவேற்புரைத்தார்.

சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரும் சிவகங்கை தொல்நடைக் குழுவின் தலைவருமான நா. சுந்தரராஜன் தலைமை வகித்தார். சிவகங்கை தமிழவைய செயற்குழு உறுப்பினரும் சிவகங்கை இராணி வேலுநாச்சியார் அரிமா சங்கத் தலைவருமான வித்யா கணபதியும் சிவகங்கை தமிழ்சங்கத் தலைவரும் ஓவியருமான கலைமகள் முத்துக்கிருஷ்ணனும் முன்னிலை வகித்தனர். திருச்சி தூயவளனார் (சென் ஜோசப் ) கல்லூரி  மேனாள் பேராசிரியர், முனைவர் பொன். புஷ்பராஜ் அவர்கள் நூலை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

கரூர் அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் சரவணன் நூலுக்கு மதிப்புரை வழங்கினார்.

காளையார்கோவில் காளையப்பா சாமில் உரிமையாளர், திருமதி மரகத மீனாட்சி முத்துக்குமரன், சிவகங்கை வழக்கறிஞர் இராம் பிரபாகர், த.மு.எ.க.ச, சிவகங்கை மாவட்டத்தலைவர் கவிஞர் சிபூ,உலகத் திருக்குறள் கூட்டமைப்பு முனைவர் வனிதா, செங்காந்தள் சோழன் பதிப்பகர் முனைவர் இயேசு ராஜா, கவிஞர் சாதிக் முகமது, இளம் பேச்சாளர் நவீன் ஆகியோர் வாழ்த்துரைத்தனர். நூலாசிரியர் புலவர் கா.காளிராசா ஏற்புரை வழங்கினார், இந்நிகழ்வில் சிவகங்கை தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், டாக்டர் அப்துல் கலாம் உதவும் கரங்கள் த.மு.எ.க.ச போன்ற அமைப்புகளின் பொறுப்பாளர்களும்

சிவகங்கை நகர் மற்றும் சுற்று வட்டார ஆசிரியர்கள், தொழில் முனைவர்கள், இளைஞர்கள் மற்றும் இலக்கியச் சுவைஞர்கள் போன்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்வை சிவகங்கை தமிழவைய உறுப்பினர் கிருஷ்ணவேணி காளிராசா தொகுத்து வழங்கினார், சிவகங்கை தொல்நடைக் குழு செயலர் இரா. நரசிம்மன் நன்றியுரைத்தார்

Read Entire Article