வெள்ளை அறிக்கை வரும்.. உங்கள் வண்டவாளம் தெரியும்.. திமுகவை சாடிய லயோலா மணி!

3 weeks ago 4
ARTICLE AD

விரைவில் வெள்ளை அறிக்கை வரும்போது உங்கள் வண்டவாளம் தண்டவாளம் ஏறும் என மு.க.ஸ்டாலினுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் லயோலா மணி பதிலடி கொடுத்துள்ளார்.

முந்தைய திமுக ஆட்சியில் 2021ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் தொடங்கப்பட்டது. அதிலிருந்து 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை வரவு வைக்கப்பட்டுள்ளது. அதுவும் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படும் முன் இந்த திட்டத்தில் ரூ.3 ஆயிரம் மொத்தமாக வரவு வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்கும் தங்கள் அரசு மகளிர் உரிமைத்தொகையை உயர்த்தி வழங்கும் என தேர்தல் வாக்குறுதியில் திமுக, அதிமுக, தவெக அதிரடியாக அறிவித்தது. இதில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்தது.

அந்த கட்சி தேர்தல் வாக்குறுதியில் மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. இந்த நிலையில் முதலமைச்சராக பதவியேற்ற விஜய் தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும். அந்த திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது என முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.

இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, அன்பில் மகேஸ் போன்றோரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதற்கு தமிழக வெற்றிக் கழகம் தொண்டர்கள் கடுமையாக பதிலடி கொடுத்தனர். அந்த வகையில் தவெக கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் லயோலா மணி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திரு @mkstalin ஐயா அவர்களே வணக்கம்.அரசு கஜானாவை
ஊழல் செய்து காலி பண்ணியது மட்டுமில்லாமல் பல லட்சம் கோடி கடன் வாங்கி வைத்துள்ள தாங்கள் முதல்வர் அவர்களுக்கு எதிராக அறிக்கை விடுவதற்கு மனசாட்சி உறுத்தவில்லையா?
விரைவில் வெள்ளை அறிக்கை வரும். அதில் உங்கள் வண்டவாளம் தண்டவாளம் ஏறப்… https://t.co/viTAoDAwjl
— Loyola Mani (@LoyolaMani) May 14, 2026

அதில், “மு.க.ஸ்டாலின் அவர்களே வணக்கம். அரசு கஜானாவை  ஊழல் செய்து காலி பண்ணியது மட்டுமில்லாமல் பல லட்சம் கோடி கடன் வாங்கி வைத்துள்ள தாங்கள் முதல்வர் அவர்களுக்கு எதிராக அறிக்கை விடுவதற்கு மனசாட்சி உறுத்தவில்லையா?
விரைவில் வெள்ளை அறிக்கை வரும். அதில் உங்கள் வண்டவாளம் தண்டவாளம் ஏறப் போகிறது. வெள்ளை அறிக்கைக்காக ஆவலுடன் எல்லோரும் காத்திருக்கிறார்கள். மக்கள் திமுகவை நிரந்தமாக வீட்டில் உக்கார வைப்பது உறுதி” என விமர்சித்துள்ளார்.

Read Entire Article