2025 ஆம் ஆண்டு வெளிநாடுகளில் வெளியான இந்திய படங்களில் அதிக வசூல் ஈட்டிய டாப் 10 படங்களின் பட்டியலை சாக்னிக் தளம் வெளியிட்டுள்ளது. ரஜினியின் கூலி திரைப்படம் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. அண்மையில் ரன்வீர் சிங் இந்தியில் நடித்த துரந்தர் திரைப்படம் இந்த கூலி படத்தின் வசூலை முறியடித்து முதலிடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

வெளிநாடுகளில் அதிகம் வசூலித்த டாப் 10 படங்கள்

கூலி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த கூலி திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களை இப்படம் பெரியளவில் திருபதிபடுத்தவில்லை என்றாலும் வசூல் ரீதியாக படம் வெற்றிப்பெற்றது. உலகளவில் இப்படம் ரூ 518 கோடி வரை வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் மட்டும் ரூ 180.50 கோடி வசூலித்து இந்த ஆண்டு டாப் 10 லிஸ்டில் முதலிடம் பிடித்துள்ளது

சையாரா

இந்தியில் அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்கள் சொதப்பிய நிலையில் இரு அறிமுக நடிகர்கள் நடித்த ரொமாண்டிக் திரைப்பட்ம சையாரா பெரும் வெற்றிபெற்றது. மோகின் சூரி இயக்கத்தில் அனீத் பட்டா , ஆஹான் பாண்டே இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படம் வெளிநாடுகளில் ரூ 171.50 கோடி வசூலித்துள்ளது

லூசிஃபர் 2 எம்புரான்

பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த எம்புரான் திரைப்படம் இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த மலையாள படமாக சாதனை படைத்தது. இப்படம் வெளிநாடுகளில் 142.25 கோடி வசூல் செய்துள்ளது

துரந்தர்

அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் படம் துரந்தர் . ரன்வீர் சிங் , அக்‌ஷய் கண்ணா, மாதவன், அர்ஜூன் ராம்பால் , சஞ்சய் தத் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படம் உலகளவில் இதுவரை 600 கோடி வசூல் செய்து இந்த ஆண்டு அதிக வசூல் ஈட்டிய படமாக முதலிடம் பிடித்துள்ளது. வெளிநாடுகளில் இப்படம் ரூ 120 கோடி வரை வசூலித்துள்ளது

லோகா சாப்டர் 1 சந்திரா

துல்கர் சல்மான் தயாரித்து கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா திரைப்படம் வெளிநாடுகளில் 119 கோடி வரை வசூலித்துள்ளது

காந்தாரா சாப்டர் 1

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து கன்னடத்தில் வெளியான காந்தாரா திரைப்படம் 111 கோடி வசூலித்துள்ளது

துடரும்

மோகன்லால் , ஷோபனா நடித்து வெளியான துடரும் திரைப்படம் சிறிய பட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய வசூல் வெற்றிப்படமாக அமைந்தது. இப்படம் வெளிநாடுகளில் 93 கோடி வசூலித்துள்ளது

சாவா

விக்கி கெளஷல் , ராஷ்மிகா மந்தனா நடித்து இந்தியில் வெளியான படம் சாவா. மராத்திய மன்னன் சிவாஜியை மையமாக வைத்து உருவான இப்படம் ரூ 91 கோடி வசூலித்துள்ளது

வார் 2

ரஜினியின் கூலி படம் வெளியான அதே நாளில் இந்தியில் ஹ்ரித்திக் ரோஷன் , ஜூனியர் என்.டி.ஆர் நடித்த வார் 2 திரைப்படம் வெளியானது. இப்படம் ரூ 81.75 கோடி வசூலித்துள்ளது

ஹவுஸ்ஃபுல்

இந்தியில் அக்‌ஷய் குமார் உட்பட மாபெரும் நட்சத்திர பட்டாளம் நடித்து உருவான படம் ஹவுஸ்ஃபுல் . இப்படம் ரூ 70.25 கோடி வசூலித்துள்ளது