வெளிநாடு செல்லாமல் தவிக்கும் விளையாட்டு வீரர்கள்.. ஓடி வந்து உதவிய தமிழக அரசு!

1 year ago 7
ARTICLE AD

வெளிநாடுகளில் நடைபெற உள்ள போட்டிகளில் பங்கேற்பதற்காக, போட்டிகளுக்கான நுழைவுக்கட்டணம், பயணம் மற்றும் தங்குமிட செலவுகளுக்காக மொத்தம் ரூ.5,99,184 க்கான காசோலைகளை 13 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்கினார்.

பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் விளையாட்டு வீரர்கள்:

தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் வெளிநாடுகளில் நடைபெறுகின்ற போட்டிகளில் பங்கேற்கும் செலவுகளை மேற்கொள்ள இயலாமையால், போட்டிகளில் பங்கேற்க முடியாமல் தவிக்கின்ற சூழலை மாற்றிட தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை உருவாக்கி, அதன் மூலமாக வெளிநாடுகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்த விளையாட்டு வீரர், வீராங்கனைளுக்கு அந்த போட்டிகளில் பங்கேற்றிட போட்டிகளுக்கான நுழைவுக்கட்டணம், பயணம் மற்றும் தங்குமிட செலவுகளுக்கான நிதியினை வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.

இதுவரை சொந்த செலவிலும், தனியார் நிறுவனங்கள், மற்றும் அமைப்புகளின் நிதியுதவியிலும் மட்டுமே போட்டிகளில் பங்கேற்று வந்த தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர், வீராங்கனைகள், தற்போது பல்வேறு வெளிநாட்டு போட்டிகளில் எளிதாக கலந்து கொள்ள கிடைத்த வாய்ப்பின் காரணமாக, தங்கள் திறமையை வெளிப்படுத்தி, பதக்கங்கள் வென்று திரும்பும் நிலை உருவாகியுள்ளது.

அதனடிப்படையில், மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் நடைபெறவுள்ள 10வது ஆசிய பசிபிக் காது கேளாதோர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் கலந்துக் கொள்ள உள்ள 11 விளையாட்டு வீரர் / வீராங்கனைகளுக்கு போட்டிக்கான மொத்தத் தொகை ரூ.2.20.000/-க்கான காசோலையை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

உதவி செய்த தமிழக அரசு:

தென்கொரிய நாட்டில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான வாள்வீச்சு விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள உள்ள வாள்வீச்சு வீராங்கனை பி. சசிபிரபாவுக்கு விமான கட்டணம், தங்கும் இடம் செலவினம் மற்றும் போட்டிக்கான நுழைவு கட்டணத்திற்க்கான தொகை ரூ. 2,00,000/-க்கான காசோலையையும் வழங்கினார்.

தொடர்ந்து எகிப்து நாட்டில் நடைபெறும் சர்வதேச அளவிலான பாரா பேட்மிட்டன் போட்டிகளில் கலந்து கொள்ள பாரா பேட்மிட்டன் விளையாட்டு வீரர் ஜெகதீஸ்டில்லிக்கு சென்று வருவதற்கான விமான கட்டணம், தங்கும் இடம் செலவினம் மற்றும் போட்டிக்கான நுழைவு கட்டணத்திற்க்கான தொகை ரூ.1.79.184/- க்கான காசோலை என இன்று மொத்தம் 13 விளையாட்டு வீரர், வீராங்கனைளுக்கு மொத்தம் ரூ.5,99,184/-க்கான காசோலைகளை "TN Champions Foundation" அறக்கட்டளை நிதியில் இருந்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

Read Entire Article