Health Tips: காய்ச்சலுக்குப் பிறகு வாய் ஏன் கசப்பாக இருக்கிறது தெரியுமா?

2 hours ago 1
ARTICLE AD

காய்ச்சல் அனைத்து பருவ காலங்களிலும் நம்மை தாக்கும் ஒரு நோயாகும். இது விதவிதமான வகைகளில் மக்களிடையே பரவுகிறது. இந்த காய்ச்சல் வந்து விட்டால் மருந்து, மாத்திரை, ஊசி, ஆவி பிடிப்பது என விடுபடுவதற்கு பல விஷயங்களை மேற்கொள்கிறோம். இப்படியான நிலையில் காய்ச்சல் வந்து விட்டால் நாம் அனைவரும் ஒரு பொதுவான பிரச்னையை எதிர்கொள்கிறோம். அதாவது வாய் கசப்பாக மாறும். இதை எதைக் கொண்டும் நம்மால் சரி பண்ண முடியாது. வாய் கசக்கும் வேளையில் நாம் தண்ணீர் குடித்தாலும் சரியாகாது. பலருக்கும் ஏன் காய்ச்சல் வந்தால் இப்படி வாய் கசப்பாகிறது என்ற கேள்வி இருக்கும். அதனைப் பற்றி நாம் காணலாம்.

காய்ச்சல் என்பதை கவலையாக கருதாமல் நமது உடல் ஒரு தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது என்பதற்கான அறிகுறியாக பார்க்க வேண்டும். காய்ச்சல் குறைந்த பிறகும், வாய் மிகவும் கசப்பாக இருக்கும். மருத்துவர்களின் கூற்றுப்படி, இது டிஸ்ஜியூசியா என்ற பிரச்சனையுடன் தொடர்புடையது என சொல்லப்படுகிறது. இதனுடைய அர்த்தம் சுவை மாற்றம் என கொள்ளலாம். இதற்கு முக்கிய காரணம் நீரிழப்பு தான் என கூறப்படுகிறது. காய்ச்சலின் போது, ​​உடல் வெப்பநிலை அதிகரித்து அதிக நீர் இழப்பு உண்டாகிறது.

இதன் காரணமாக வாயில் உள்ள உமிழ்நீர் விரைவாக வறண்டு போகிறது. அப்படியாக வாயில் உள்ள நீர்ச்சத்து குறையும் போது பாக்டீரியாக்கள் வளர்ந்து கசப்பாக மாறும். இது பொதுவாக காய்ச்சலுக்குப் பிறகு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் நீடிக்கும்.

அதேசமயம் காய்ச்சல் வரும்போது நாம் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக் கொள்கிறோம். இவை வாயில் கசப்புச் சுவையையும் ஏற்படுத்தக்கூடியவை. மேலும் சளி, சைனஸ் தொற்று அல்லது காய்ச்சல் மூக்கில் அடைப்பை ஏற்படுத்தும். சுவாச நோய்த்தொற்றுகளும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் உண்டாகும் திரவம் தொண்டைக்குள் நுழைந்து வாயில் கசப்பு சுவையை உண்டாக்குகிறது. மூக்கில் அடைப்பு ஏற்பட்டால் நாம் வாய் வழியாக சுவாசிக்க வேண்டும், இது நம் வாயை உலர்த்தும் என்பதால் துர்நாற்றத்துடன் வாயில் பாக்டீரியா வளர்ந்து கசப்பை அதிகரிக்கிறது.

ஈஸ்ட் தொற்று நாக்கில் வெள்ளைத் திட்டுகளையும் கசப்பான சுவையையும் ஏற்படுத்தும்.  கல்லீரல் ஹெபடைடிஸ் நச்சுகள் சரியாக வடிகட்டப்படாமல் இருந்தாலும் இந்த பிரச்னை உண்டாகலாம். உணவு சரியாக சாப்பிடவில்லை என்றால் வயிற்றில் அமிலங்கள் உண்டாகி  இது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆனால் இது காய்ச்சலால் நிகழாது.

நாள் ஒன்றுக்கு 2-3 லிட்டர் தண்ணீர் குடிப்பது நீரிழப்பைக் குறைக்கும். இதனால் இந்த பிரச்னையை சரி செய்யலாம். சர்க்கரை இல்லாத சூயிங்கம், ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் பேக்கிங் சோடாவை கலந்து வாயில் ஊற்றி கொப்பளிக்க வேண்டும். இவை யாவும் அமிலத்தன்மையை குறைக்கும். அதேபோல் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை பல் துலக்கலாம். காய்ச்சலின் போது கொழுப்பு அல்லது காரமான உணவுகளை சாப்பிடக்கூடாது. இவை பிரச்னையை மேலும் அதிகரிக்கும். இந்தக் கசப்புச் சுவை ஒரு வாரத்திற்கும் மேலாக நீடித்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. அது வேறு ஏதேனும் உடல் நல பாதிப்பாக கூட இருக்கலாம்.

Read Entire Article